58 வயது முரட்டு சிங்கிள் நடிகருடன் கைகோர்க்கும் நடிகை திரிஷா.. முதல் முறையாக இணையும் ஜோடி
நடிகை திரிஷா தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் கடந்த 20 ஆண்டுகளாக ஆட்சி செய்து வருகிறார்.
மௌனம் பேசியதே படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்த திரிஷா தொடர்ந்து விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வந்தார்.இதன்பின் 96 திரைப்படம் இவருக்கு நல்ல பிரேக் கொடுத்தது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இவருக்கு பல திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
சமீபத்தில் கூட விஜய்யின் லியோ படத்தில் நடித்திருந்தார். மேலும் தற்போது அஜித்தின் விடாமுயற்சி, கமலின் தக் லைப் என பிசியாக நடித்து வருகிறார்.
முரட்டு சிங்கிள் நடிகருடன் கைகோர்க்கும் திரிஷா
இந்நிலையில், அடுத்ததாக பாலிவுட் திரைப்படத்தில் நடிக்க திரிஷா கமிட்டாகியுள்ளாராம். பாலிவுட் திரையுலகில் 58 வயதாகியும் முரட்டு சிங்கிளாக இருக்கும் சல்மான் கான் திரைப்படத்தில் தான் கதாநாயகியாக திரிஷா நடிக்கவுள்ளாராம். இப்படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.