மீண்டும் ராஜாவாக நம்பர் 1 அரியணையில் அமர்ந்த ரஜினிகாந்த்.. இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்ட விஜய்

கடந்த ஆண்டு பல நடிகர்களின் பெஸ்ட் பெர்ஃபார்மென்ஸை திரையில் பார்க்க முடிந்தது. இதில் ரஜினியின் பெர்ஃபார்மென்ஸ் பற்றி பேசிய ஆகவேண்டும்.

ஜெயிலர் படத்தின் மூலம் ரஜினியின் நடிப்பு மட்டுமின்றி திரையுலகில் அவர் மீண்டும் மாஸ் கம் பேக் கொடுத்தார். கடந்த ஆண்டு அதிகம் வசூல் செய்த திரைப்படம் என்றால் அது ரஜினிகாந்தின் ஜெயிலர் தான்.

உலகளவில் ரூ. 635 கோடிக்கும் மேல் வசூல் செய்து இண்டஸ்ட்ரி ஹிட் ஆனது. இந்நிலையில், கடந்த ஆண்டு திரையரங்கங்களிம் டாப் 10 லிஸ்ட் தொடர்ந்து வெளிவந்துகொண்டே இருந்தது.

நம்பர் 1 அரியணையில் அமர்ந்த ரஜினிகாந்த்

இதில் தமிழ்நாட்டை பொறுத்தவரை கிட்டத்தட்ட 80% சதவீதத்திற்கும் மேல் அனைத்து திரையரங்கங்களிலும் முதலிடத்தை ஜெயிலர் திரைப்படம் தான் பிடித்துள்ளது. குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் ரோகினி, காசி, உதயம், வெற்றி போன்ற பல திரையரங்கங்களில் முதலிடத்தை ஜெயிலர் தக்கவைத்துள்ளது.

இதன்மூலம் மீண்டும் நம்பர் 1 இடத்தை ரஜினிகாந்த் பிடித்தது மட்டுமின்றி விஜய் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *