வந்துருச்சு விடாமுயற்சி அப்டேட்.. லைகா-வே கூறிவிட்டது! அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய், ரஜினி, கமல் என தொடர்ந்து முன்னணி நடிகர்கள் படங்களின் அப்டேட் வெளியாகிறதே, ஆனால் அஜித் படத்தின் அப்டேட் மட்டும் வெளிவரவில்லையே என ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தனர்.
புத்தாண்டு நாளிலாவது விடாமுயற்சி படத்தின் அப்டேட்டை லைக்கா நிறுவனம் வெளியிடுமா என கேள்வி எழுந்தது. ஆவலுடன் காத்துகொண்டு இருந்த அஜித் ரசிகர்களுக்கு லைக்கா நிறுவனம் சர்ப்ரைஸ் அப்டேட் கொடுத்துள்ளது.
லேட்டஸ்ட் அப்டேட்
2024ல் வெளிவரவிருக்கும் தங்களது தயாரிப்பில் உள்ள படங்கள் அனைத்தையும் குறிப்பிட்டு புத்தாண்டு வாழ்த்தை லைக்கா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதை தொடர்ந்து பரவலாக பேசப்பட்டு வரும் விடாமுயற்சி படத்தின் சுவாரஸ்யமான தகவலும் வெளிவந்துள்ளது.
அதன்படி, விடாமுயற்சி படத்தின் ஆடியோ உரிமையை சோனி ம்யூசிக், சாட்டிலைட் உரிமையை சன் டிவி மற்றும் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனங்கள் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது அஜித் ரசிகர்களுக்கு புத்தாண்டு சர்ப்ரைஸ் டிரீட் ஆக அமைந்துள்ளது.