உட்கார்ந்தபடி வேலை பார்ப்பவரா நீங்கள்?.. உங்களுக்காகத்தான் இந்த செய்தி.!!

ழில்நுட்ப மயமாகிவிட்ட உலகில் பலரும் வீடுகளில் இருந்தும், அலுவலகங்களில் இருந்தும் பணியாற்றி வருகின்றனர்.

கணினி சார்ந்த வேலை பார்ப்போர் எங்கும் எழுந்து செல்ல கூட நேரமில்லாமல் ஒரே இடத்தில் அமர்ந்தவாறு ஓயாது உழைத்து வருகின்றனர்.

இவ்வாறாக உட்கார்ந்து வேலை செய்து வருபவர்களுக்கு நீரிழிவு நோய், கணையம் சார்ந்த பிரச்சனைகள், எலும்பு சார்ந்த பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரியவருகிறது. இதனால் வேலை செய்யும்போது குறைந்தது ஐந்து நிமிட இடைவெளியாவது எடுத்துக்கொண்டு சிறிது தூரம் நடக்க வேண்டும்.

அலுவலகத்தில் லிப்ட் இருந்தபோதிலும் அதனை பயன்படுத்தாமல் படிக்கட்டுகளை பயன்படுத்தி வருவது நல்லது. முடிந்த வரையில் தரையில் உட்கார்ந்து வேலை செய்வது, கடைகளுக்கு செல்லும்போது மிதிவண்டியை பயன்படுத்துவது நமது உடல் நலத்தை பாதுகாக்கும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *