நிஜத்திலும் கர்ணனாக வாழந்த நடிகர் திலகம்!.. ஆனா படத்துக்கு வந்ததுதான் சோகம்…!

சிவாஜியைப் பொருத்தவரை அவர் தான, தர்மம் என எதுவும் செய்தது இல்லை என்று சொல்வார்கள். ஆனால் அவர் செய்த உதவி அளவில் பெரியது. ஆனால் வெளியே தெரியாமல் விளம்பரப்படுத்தாமல் செய்ததால் அது யாருக்கும் தெரியாமல் போய்விட்டது. இதற்கான ஆதாரப்பூர்வமான தகவல்களும் உள்ளனவாம். இவற்றைப் பற்றிப் பார்க்கலாமா…

சிவாஜி பெரிய கொடைவள்ளல். ஆனால் அவை எல்லாம் வெளியே தெரியவில்லை. 1953ம் ஆண்டு ஈழத்தில் யாழ்ப்பாணத்தில் மருத்துவமனை கட்ட ரூ.25 ஆயிரம் கொடுத்துள்ளார். இதற்காக என் தங்கை என்ற நாடகம் போட்டு அந்த வசூலைக் கொடுத்தாராம். அவர் சினிமாவுக்கு வந்ததே 1952ல் தான்.

1959ல் சென்னை மேயரின் ஏழைக் குழந்தைகளுக்கான மதிய உணவு திட்டத்திற்கு அன்றைய பிரதமர் நேருவிடம் ரூ.1லட்சம் கொடுத்துள்ளார். அதன்பிறகு சென்னையில் உள்ள ஸ்டான்லி மருத்துவனைக்கு குழந்தைகள் மருத்துவத்திற்காக ரூ.2000 நிதி உதவியாகக் கொடுத்துள்ளார்.

1960ல் புயல் வந்தபோது 1 லட்சம் உணவுப் பொட்டலங்களும், குழந்தைகளுக்காக 1000 பவுண்டு பால் பவுடரும், 800 அரிசி மூட்டைகளும் அன்றைய காங்கிரஸ் அரசின் முதல் அமைச்சர் காமராஜரிடம் அளித்தார். அன்றைய மதிப்பு ரூ.5 லட்சத்து 50 ஆயிரம். அப்பவே இவ்ளோ தொகையைக் கொடுத்து இருக்கிறார் என்பது பெரிய விஷயம்.

கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் ஜீவானந்தம் விவசாய நலனுக்காக நிதி திரட்டுகிறார் என்றதும், அவருக்கு ரூ.5லட்ச ரூபாயை அன்பளிப்பாகக் கொடுத்தாராம். இந்த தொகையைப் பெற வீதி வீதியாக வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகத்தைப் போட்டு வசூல் செய்தாராம். இது தன் கட்சியின் எதிரியான கம்யூனிஸ்ட் கட்சிக்கேக் கொடுத்துள்ளார்.

அது மட்டுமல்லாமல் மகாராஷ்டிராவில் உள்ள ஏழைக்குழந்தைகளின் படிப்புக்காக ரூ.5லட்சம் கொடுத்துள்ளார். 1961 ல் சென்னை கிழக்கு தாம்பரத்தில் உள்ள புற்றுநோய் மருத்துவமனை கட்டட நிதிக்கு ரூ.1லட்சத்தை அன்றைய பிரதமர் நேருவிடம் கொடுத்தார் சிவாஜி.

பாசமலர் படத்தின் இந்திப்பதிப்பு மிகப்பெரிய வசூல் சாதனை செய்தது. அவை அனைத்தையும் இந்திய சீனப்போருக்காக நேருவிடம் கொடுத்தாராம். மதுரை பாத்திமா காலேஜில் ஒரு பில்டிங் கட்டுவதற்காக ரூ.25 ஆயிரம் கொடுத்தாராம்.

வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகத்தை 112 முறை நடத்தி அந்த வசூல் தொகை ரூ.32 லட்சத்தையும் கல்லூரிகள், பள்ளிகள் மேம்பாட்டிற்காக அன்றைய காங்கிரஸ் அரசிடம் அப்படியே கொடுத்தாராம். இதுவரை எந்த சினிமா நடிகரும் கல்வி, விவசாயம், மருத்துவத்திற்காக யாரும் செய்ததே இல்லையாம்.

மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி சிலை அமைக்க ரூ.1லட்சம் நன்கொடையாகக் கொடுத்தார். மதுரை சரஸ்வதி பள்ளி 64ல் இடிந்து பாதிக்கப்பட்டது. அதற்கு ரூ.1லட்சம் நிதியைக் கொடுத்தார்.

கர்ணன் படப்பிடிப்பின்போது தஞ்சை அரண்மனை சென்றபோது அங்குள்ள பள்ளியைப் பார்வையிடுகிறார். அங்கு கழிவறை வசதிக்காக ரூ.10 லட்சம் நன்கொடையைக் கொடுத்துள்ளார். 1964ல் மகாராஷ்டிராவில் கொய்னா என்ற அணை உடைந்து விட்டது. அதை சரிசெய்ய அம்மாநில முதல்வர் ஒய்.பி.சவானிடம் ரூ.13 லட்சத்தைக் கொடுத்துள்ளார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *