மாடர்ன் உடையில் ஸ்ருதியின் அராஜகம்..! தவித்து போய் நிற்கும் விஜயா.. கடுப்பில் அண்ணாமலை..!
Siragadikka aasai: இன்றைய எபிசோட்டில் பாட்டி ஊரில் வேலை இருக்கு. கிளம்புகிறேன் என்கிறார். இதைக்கேட்ட, விஜயா மனோஜிடம் நல்ல வேலை இங்கேயே கொஞ்ச நாள் தங்கிடுவாங்கன்னு பயந்துட்டேன். கிளம்புறேன்னு சொல்லிட்டாங்க ரொம்ப சந்தோஷம் என்று சொல்கிறார்.
எல்லாரிடமும் சொல்லிவிட்டு மீனாவை பார்க்க ரூமுக்கு போக, அவர் சால்வை எடுத்து கொடுக்கிறார். உடனே பாட்டி கேட்கணும் நினைச்சேன். கழுத்தில் இருந்த தாலி எங்க. நகைலாம் காணும். முத்துவுக்கு எதுவும் கஷ்டமா வாங்கி அடகு வச்சிருக்கானா என்கிறார். இதற்கு பதில் சொல்ல முடியாமல் மீனா திணருகிறார்.
பின்னர் அவர் அதட்டி கேட்க விஜயா பேசிய அனைத்தையும் சொல்லிவிட பாட்டி கோபமாகிவிடுகிறார். அந்த அம்மணி என்னத்தை போட்டுட்டு வந்தா? இரு அவளை பாத்துக்கிறேன் எனப் போக மீனா ப்ளீஸ் பாட்டி சண்டை வேணாமே என தடுத்து விடுகிறார்.
சரி ஊருக்கு வரட்டும். அவளுக்கு இருக்கு எனச் சொல்லிவிட்டு முத்துவை கூப்பிட உள்ளே வருகிறார். வெளியில் இருக்கும் மனோஜிடம் விஜயா என்ன அவனை மட்டும் தனியா கூப்பிட்டு பேசுறாங்க எனக் கேட்க சொத்தை கொடுக்க போறாங்களோ எனப் பேசிக்கொள்கின்றனர்.
உடனே அண்ணாமலை இதுல மட்டும் சரியா இருப்பீங்களே எனத் திட்டுகிறார். முத்துவிடம் பாட்டி ஏன் என்கிட்ட இதை சொல்லலை என்கிறார். மீனாவே பேசிட்டா பாட்டி. நான் கொஞ்சம் காசு வச்சிருக்கேன் மீனாக்கு தாலி வாங்கி கொடு என்கிறார் பாட்டி. இல்லை நீ அதை வச்சிக்கோ நானே வாங்கி தரேன் என முத்து மறுத்துவிடுகிறார்.
பின்னர் இரவில் எல்லாரும் ஹாலில் இருக்க ஸ்ருதி அரைகுறை ஆடையுடன் கொசு அடிக்கிறார். இதை பார்த்த அண்ணாமலை தலைகுனிந்து கொள்கிறார். உடனே விஜயா ஸ்ருதியை டைனிங் டேபிளில் தள்ளி நிறுத்துகிறார். இங்க ஏன்மா இப்படி ட்ரஸ் என்கிறார். நான் என் வீட்டிலையே இப்படிதான் போடுவேன். இதும் என் வீடு தானே என்கிறார்.
ரோகினி உனக்கு கம்போர்ட்டா இருந்தா போதுமா? வேற யாருக்கும் இருக்கணும் என்கிறார் ஸ்ருதி. தொடர்ந்து மீனா, ஸ்ருதி தனியாக சமையல் கட்டுக்கு அழைத்து போய் அறிவுரை சொல்கிறார். இருந்தும் ஸ்ருதி வீம்புக்கு பேசிக்கொண்டு இருப்பதுடன் இன்றைய எபிசோட் முடிவடைந்தது.