IND vs SA : ருதுராஜ் கெய்க்வாட் நீக்கம்.. தமிழக வீரருக்கு வாய்ப்பு.. இந்திய பிளேயிங் லெவனில் மாற்றம்

இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வென்ற நிலையில், 2வது ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றிபெற்று பதிலடி கொடுத்தது. இந்த நிலையில் தொடர் யாருக்கு என்பதை முடிவு செய்யும் கடைசி ஒருநாள் போட்டி இன்று தொடங்கியுள்ளது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி கேப்டன் எய்டன் மார்க்ரம் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இந்த பிட்சில் இரண்டாவது பேட்டிங் செய்யும் அணிக்கு கூடுதல் சாதகம் இருப்பதால், தென்னாப்பிரிக்கா அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. இந்த போட்டியில் இந்திய அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

டாஸ் வென்ற பின் தென்னாப்பிரிக்கா அணி கேப்டன் மார்க்ரம் பேசுகையில், நாங்கள் பவுலிங் செய்ய விரும்புகிறோம். இந்த ஆடுகளத்தில் பெரிய மாற்றம் இருக்காது. இந்திய அணி பேட்ஸ்மேன்கள் சீரான இடைவேளையில் வீழ்த்தி தடுத்து நிறுத்துவோம் என்ற நம்பிக்கை உள்ளது. தொடரை கைப்பற்றி நிச்சயம் தீவிரமாக உள்ளோம். 2வது ஒருநாள் போட்டியை விடவும் இன்னும் சிறப்பாக விளையாட வேண்டும். இந்த ஆடுகளத்தில் அதிக ரன்களை ஓடி எடுக்க முயற்சிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இதன்பின் இந்திய கேப்டன் கேஎல் ராகுல் பேசுகையில், முதலில் பேட்டிங் செய்வதை பற்றி கவலையில்லை. இந்த மைதானத்தில் வெளிச்சம் குறைய சிறிது அதிக நேரமாகும் என்று நினைக்கிறேன். கடைசி போட்டியில் கடைசி 40 ரன்களில் 5 விக்கெட்டுகளை இழந்தது தோல்விக்கு காரணமாகியது. நிச்சயம் சிறந்த தொடக்கம் கிடைத்தால், அதனை இன்னும் சிறப்பாக்க முயற்சிப்போம்.

அதேபோல் இளம் வீரர்களுக்கு இது சிறந்த வாய்ப்பாக இருக்கும். நிச்சயம் அதிக ரன்களை விளாச முயற்சிப்போம். இன்றைய ஆட்டத்தில் ரஜத் படிதர் ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகம் செய்யப்படுகிறார். ருதுராஜ் கெய்க்வாட் விரலில் காயம் ஏற்பட்டுள்ளதால், அவருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் குல்தீப் யாதவிற்கு ஓய்வு வழங்கப்பட்டு வாஷிங்டன் சுந்தர் பிளேயிங் லெவனுக்குள் வந்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *