அம்மாடியோவ் இவ்ளோ சொத்துக்களுக்கு அதிபதியா கேப்டன்? கேட்டா வாயடைச்சு போய்டுவீங்க
Actor Vijayakanth: தமிழ் சினிமாவில் எம்ஜிஆருக்கு அடுத்த படியாக மிகப்பெரிய மக்கள் செல்வாக்கு அதிகம் பெற்ற நடிகராக திகழ்ந்தவர் கேப்டன் விஜயகாந்த். புரட்சிக் கலைஞர் என்ற அடைமொழியோடு எம்ஜிஆருக்கு இணையாக மிகப்பெரும் ஆளுமையாக இருந்தார்.
பல புகழுக்கு சொந்தக் காரரான விஜயகாந்தின் மறைவு திரையுலகினரை மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த தமிழக மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. கடந்த சில வருடங்களாக உடல் நிலை சரியில்லாமல் இருந்த விஜயகாந்திற்கு நுரையீரலில் தொற்று இருந்து வந்தது.
அதன் காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்புதான் சிகிச்சை பலனின்றி விஜயகாந்த் நம்மை விட்டு நீங்கினார். இந்த நிலையில் விஜயகாந்தின் சொத்தமதிப்பு குறித்து பல சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகியிருக்கிறது. விஜயகாந்த் ரஜினி, கமலுக்கு நிகராக இருக்கும் போதே அவர் வாங்கிய சம்பளம் வெறும் 3 கோடிதானாம்.
ஆனால் தன் தயாரிப்பு நிறுவனம் சார்பாக பல படங்களை தயாரித்து சொத்துக்களை குவிக்க ஆரம்பித்தார். ஆனால் பணத்தை தேடி என்றைக்கும் கேப்டன் போனதில்லை. அவரை தேடி பணம் வரத் தொடங்கியது. அதனாலேயே அன்றைய காலத்தில் மிக மலிவான விலையில் ஏராளமான சொத்துக்களை குவிக்க ஆரம்பித்தார் கேப்டன்.
ஆனால் சேர்த்த சொத்துக்களை எல்லாம் பொதுக்கூட்டம் நடத்துவது, தேர்தல் செலவுகள் என இவற்றிற்கு பயன்படுத்தினார் விஜயகாந்த். கூட்டணி அமைத்தாலாவது அந்த கட்சியில் இருந்து சில தொகைகள் கொடுப்பார்கள். ஆனால் அதையும் விஜயகாந்த் செய்யவில்லை. இதனாலேயே ஏராளமான சொத்துக்களை அவர் இழக்க நேர்ந்தது.
அதுபோக விஜயகாந்த் சார்பாக அவர்கள் குடும்பத்தாரிடம் இருக்கும் சொத்துக்கள் என்றால் ஆண்டாள் அழகர் கல்லூரி, ஆண்டாள் அழகர் திருமண மண்டபம், கேப்டன் ஃபார்ம்ஸ் பிரைவேட் லிமிடெட், கேப்டன் மீடியா பிரைவெட் லிமிடெட், கேப்டன் சினி கிரியேசன்ஸ், விஜய் பாண்டி ப்ராபர்ட்டி பிரைவேட் லிமிடேட், மதுராந்தகத்தில் உள்ள விவசாய நிலங்கள் என இந்த சொத்து மதிப்பே கிட்டத்தட்ட 45 கோடி வரை இருக்குமாம்.
அதுபோக இரண்டரை கிலோ தங்கம் ,வெள்ளி , விலையுயர்ந்த வாகனங்கள், பைக்குகள் என மொத்தம் நிகர மதிப்பு 53 கோடி வரை பெறும் என்று கூறப்படுகிறது. ஆனால், அவரின் குணமே எங்களுக்கு பெரிய சொத்து. அவரே போயிட்டார்.. சொத்து மதிப்பு தெரிஞ்சி என்ன பண்ண போறோம் எனவும் ரசிகர்கள் பலரும் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.