பருப்பு சேர்த்து இப்படி கீரை குழம்பு செய்யுங்க: இந்த சுவைக்கு எதுவும் கிட்ட வர முடியாது
இப்படி ஒரு முறை முருங்கை கீரை குழம்பு செய்துபாருங்க. எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.
தேவையான பொருட்கள்
2 வெங்காயம்
3 தக்காளி
6 பச்சை மிளகாய்
முருங்கைக்கீரை 1 கப்
பூண்டு 8
அரை ஸ்பூன் மஞ்சள்தூள்
துவரம் பருப்பு
ஊப்பு
புளி கொஞ்சம்
எண்ணெய்
கட்கு
பூண்டு 2
உளுந்தம் பருப்பு
கருவேப்பிலை 1 கொத்து
2 வத்தல்
செய்முறை: ஒரு பாத்திரத்தில் வெங்காயம், தக்காளி, பருப்பு,பச்சை மிளகாய், மஞ்சள் தூள், கீரை தண்ணீர் சேர்த்து வேக வக்கவும். இதில் உப்பு சேர்த்து கொள்ளவும். நன்றாக வெந்ததும், அத்துடன் புளி சேர்த்து மிக்ஸியில் அரைத்துகொள்ள வேண்டும். ரொம்ப நைசாக அரைக்க வேண்டாம். ஒரு பத்திரத்தில் எண்ணெய், கடுகு, கருவேப்பிலை, பூண்டு , வத்தல் சேர்த்து கிளரவும்.. இதை கீரையில் சேர்க்கவும்