ஒரு பங்கு விலை வெறும் 6 ரூபா.. ஆனா 3 வருடத்தில் 375% லாபத்தை கொடுத்தது.. மிஸ் பண்ணிடாதீங்க..!
மத்திய அரசுக்கு சொந்தமான எல்ஐசி நிறுவனம் நாட்டின் மிகப்பெரிய இன்ஸ்யூரன்ஸ் நிறுவனம் என்பது எல்லோருக்கும் தெரியும், ஆனால் இந்நிறுவனம் மிகப்பெரிய பங்குச் சந்தை முதலீட்டாளர் என்பது பங்குச்சந்தையில் முதலீடு செய்வோருக்கு மட்டுமே தெரியும்.
இந்நிறுவனம் சிறந்த பங்குகளை தேர்வு செய்து அதில் முதலீடு அதில் வரும் வருமானத்தை தாண்டி தனது பாலிசிதாரர்களுக்கு அளிக்கிறது. அந்த பங்குகள் விலை உயர்ந்தவுடன் அவற்றை விற்பனை செய்து லாபம் ஈட்டுகிறது. பங்குச் சந்தை முதலீடுகள் வாயிலாக மட்டுமே கோடிக்கணக்கில் எல்ஐசி சம்பாதிக்கிறது. எல்ஐசியின் போர்ட்போலியோவில் உள்ள பங்குகள் என்றாலே சிறந்த பங்குகளாக இருக்கும் என்று பலரும் நம்புகின்றனர்.
இப்படி எல்ஐசியின் போர்ட்போலியோ-வில் இருக்கும் ஒரு பென்னி பங்கு மூலம் ஒரே நாளில் ரூ.36,71,933 லாபம் அடைந்துள்ளது. அந்த பென்னி பங்கு இன்டெக்ரா எசென்ஷியா லிமிடெட். இந்நிறுவனம் உணவு, உடை, உள்கட்டமைப்பு மற்றும் எரிசக்தி போன்ற வாழ்க்கைக்கு அத்தியாவசியமான வணிகத்தில் ஈடுபட்டுள்ளது. மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை ரூ.6.21ஆக இருந்தது. இந்நிறுவன பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு சுமார் ரூ.283 கோடியாக உள்ளது.
மும்பை பங்குச் சந்தையில் நேற்று இன்டெக்ரா எசென்ஷியா பங்குகளுக்கு அதிகப்படியான டிமாண்ட் இருந்தது. நேற்று இப்பங்கின் விலை ஒரே நாளில் 14.55 சதவீதம் உயர்ந்து ரூ.5.50ல் இருந்து ரூ.6.30ஆக உயர்ந்தது. இதன் மூலம் எல்ஐசி இந்த பங்கின் வாயிலாக ஒரே நாளில் ரூ.36.71 லட்சம் ஆதாயம் அடைந்தது. 2023 செப்டம்பர் நிலவரப்படி, எல்ஐசி வசம் இன்டெக்ரா எசென்ஷியாவின் 48,59,916 பங்குகள் உள்ளது.
நேற்று இப்பங்கின் வர்த்தகததின் இடையே 80 காசுகள் உயர்ந்தது. இதனையடுத்து எல்.ஐ.சி ஒரே நாளில் இப்பங்குகள் வாயிலாக ரூ.36,71,933 ஆதாயம் (48.59 லட்சம் x 0.80) அடைந்துள்ளது. இன்டெக்ரா எசென்ஷியா நிறுவன பங்கு கடந்த 2 ஆண்டுகளில் முதலீட்டாளர்களுக்கு 375 சதவீதம் ஆதாயம் கொடுத்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் இந்த மல்டிபேக்கர் பங்கின் விலை 1,080 சதவீதம் உயர்ந்துள்ளது. இன்டெக்ரா எசென்ஷியா நிறுவனம் தனது பங்குதாரர்களுக்கு 1:1 என்ற விகிதத்தில் போனஸ் வழங்க உள்ளது.
அதாவது பங்குதாரர்கள் வைத்திருக்கும் ஒரு பங்குக்கும் ஒரு பங்கு கூடுதலாக பெறுவார்கள். Brewtus Beverages நிறுவனத்தில் பெரும்பான்மையான பங்குகளை வாங்குவதன் மூலம் இந்நிறுவனம் பீர் மற்றும் விஸ்கி உற்பத்தி சந்தையில் தனது வர்த்தகத்தை விரிவுப்படுத்துகிறது. இன்டெக்ரா எசென்ஷியா நிறுவனம் கடந்த செப்டம்பர் காலாண்டில் வருவாயாக ரூ.66.90 கோடியும் நிகர லாபமாக ரூ.7.54 கோடியும் ஈட்டியுள்ளது.