Health Benefits of Pink Guava : பிங்க் நிற கொய்யாப்பழத்தின் நன்மைகளை தெரிந்துகொள்ளுங்கள்!
Health Benefits of Pink Guava : பிங்க் நிற கொய்யாப் பழத்தின் நன்மைகள்
பிங்க் நிற கொய்யாப்பழங்களில் பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளது. உங்களுக்கு கொய்யாப்பழம் பிடிக்கும் என்றால், நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டியது பிங்க் நிற கொய்யாப்பழங்கள்தான். பார்ப்பதற்கு அழகாக இருப்பதைவிட இந்தப்பழத்தில் பல்வேறு நன்மைகள் உள்ளன. பிங்க் கொய்யாப்பழங்கள் சூப்பர் ஃபுட் என்று அழைக்கப்படுகிறது.
ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது
பிங்க் நிற கொய்யாப்பழங்களில் வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்துள்ளது. இதில் பொட்டசியச்சத்து மற்றும் பெக்டின் நிறைந்துள்ளது. 100 கிராம் கொய்யாப்பழத்தில், உங்கள் உடலுக்கு தேவையான 20 சதவீத நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த முக்கிய வைட்டமின்களில் ஏ, பி1, பி2, பி3 மற்றும் இ சத்துக்கள் நிறைந்துள்ளது.
கொழுப்பு மேலாண்மை
பிங்க் நிற கொய்யாப்பழத்தில் உள்ள நார்ச்சத்துக்கள், கெட்ட கொழுப்பை நீக்க உதவுகிறது. கொழுப்பை குறைக்கும் உட்பொருட்கள் அடங்கியுள்ளது. இந்த இயற்கை கொழுப்பு நிறைந்த பிங்க் நிற கொய்யப்பழங்கள், இதய ஆரோக்கியத்துக்கு சிறந்த தேர்வு.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது
இதில் உள்ள வைட்டமின் சி சத்து, உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. 100 கிராம் கொய்யாப்பழத்தில் 228 மில்லிகிராம் வைட்டமின் சி சத்து உள்ளது. பிங்க் நிற கொய்யப்பழங்களை தொடர்ந்து சாப்பிட்டால், உங்கள் உடலுக்கு அது நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது. உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் அதிகரிக்கிறது.
சரும பாதுகாப்பு மற்றும் வயோதிகத்தை தடுக்கிறது
இதில் உள்ள ஊட்டச்சத்துப்பொருட்கள் மற்றும் பிங்க் நிற கொய்யாப்பழத்தில் பீட்டா கரோட்டின்கள் மற்றும் லைகோபென் அதிகம் உள்ளது. இரண்டு முக்கிய ஆன்டி ஆக்ஸிடன்ட்கள். இந்த ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உடலுக்கு தேவையான எதிர்ப்பாற்றலை வழங்குகிறது. சருமத்துக்கு பாதுகாப்பை வழங்குகிறது. வயோதிகத்தை தடுக்கிறது.
எடை மேலாண்மை
கொய்யாப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. தண்ணீர்ச்சத்தும் நிறைந்துள்ளதால், இந்தப்பழத்தை சாப்பிடுவது வயிறு நிறைந்த உணர்வை தருகிறது. இது ஊட்டச்சத்து நிறைந்த சிற்றுண்டி. இதில் சிறிது சாட் மசாலா தூவி நாக்கிட சுவை அள்ளம். ஆரோக்கியமான, ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஸ்னாக்ஸாகவும் இது உள்ளது.
ரத்த அழுத்ததை முறைப்படுத்துகிறது
இதில் உள்ள பொட்டாசிய சத்து, உடலில் ரத்த அழுத்ததை முறைப்படுத்துகிறது. உடல் எடை குறைப்பதற்கு பிங்க் நிற கொய்யாப்பழங்களை அதிகம் எடுத்துக்கொள்ளும்போது அது ரத்த அழுத்தத்தை பராமரிக்க உதவுகிறது. இந்த பழத்தை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. இது உங்கள் இதய ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது.
நீரிழிவு நோய்க்கு உகந்தது
பிங்க் கொய்யாப்பழத்தில் கிளைசைமிக் அளவு 24 மற்றும் இதில் உள்ள நார்ச்சத்து சிறந்த தேர்வாகிறது. இதில் உள்ள நார்ச்சத்து வாயுத்தொல்லையை சரிசெய்கிறது. ரத்தசர்க்கரை அளவை கட்டுப்படுத்தி அதிரடியாக உயர்வதை தடுக்கிறது
கர்ப்ப காலத்தில் உதவுகிறது
பிங்க் நிற கொய்யா கர்ப்பிணிகளுக்கு சிறந்த தேர்வாகும். இதில் ஃபோலிக் அமிலச்சத்து நிறைந்துள்ளது. வைட்டமின் பி9 சத்தும் உள்ளது. இந்த ஊட்டச்சத்துக்கள், குழந்தையின் நரம்பு மண்டல வளர்ச்சிக்கு முக்கியமானவை. கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு நரம்பியல் பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்கிறது.
மூளைக்கு வலு சேர்க்கிறது
வைட்டமின் பி3, பி6 பிங்க் கொய்யாப்பழத்தில் அதிகம் உள்ளது. இது ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இது நினைவாற்றல் திறனை மட்டும் வளர்க்கவில்லை. ஒட்டுமொத்த மூளை ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது. உங்கள் உணவில் பிங்க் நிற கொய்யாப்பழங்களை சேர்ப்பதன் மூலம் உங்களுக்கு மனத்தெளிவு ஏற்படுகிறது.