Green Chilli Pickle : பச்சை மிளகாய் ஊறுகாய்! காரம் இருக்காது! அபாரமான ருசியில் அசத்தும்!
Green Chilli Pickle : பச்சை மிளகாய் ஊறுகாய். காரம் இருக்காது! அபாரமான ருசியில் அசத்தும்.
தேவையான பொருட்கள்
நல்லெண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்
கடுகு – அரை ஸ்பூன்
வெந்தயம் – அரை ஸ்பூன்
பூண்டு – 20 பல்
சின்ன வெங்காயம் – 10
கறிவேப்பிலை – 2 கொத்து
புளி – எலுமிச்சை அளவு
பச்சை மிளகாய் – 25
உப்பு – தேவையான அளவு
வெல்லம் – ஒரு ஸ்பூன்
பெருங்காயத்தூள் – கால் ஸ்பூன்
செய்முறை
ஒரு கடாயில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, காய்ந்தவுடன் கால் ஸ்பூன் கடுகு, வெந்தயம், 10 பல் பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
பின்னர் கறிவேப்பிலை, புளி ஆகிய அனைத்தையும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
பின்னர் பச்சை மிளகாயின் விதைகளை நீக்கிவிட்டு, சேர்த்து, மூடி வைத்து நன்றாக 20 நிமிடங்கள் வதக்க வேண்டும்.
வதங்கிய அனைத்தும் ஆறியவுடன், அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து, அதனுடன் சிறிது வெல்லத்தையும் சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு கடாயில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கடுகு, கறிவேப்பிலை, பூண்டு சேர்த்து தாளித்து அரைத்த பச்சை மிளகாய் விழுதை சேர்க்க வேண்டும்.
பின்னர் பெருங்காயத்தூள் சேர்த்து அனைத்தையும் நன்றாக வதக்க வேண்டும்.
நிறம் மாறி, எண்ணெய் பிரிந்து வரும் பதத்தில் அடுப்பை அணைத்துவிடவேண்டும். சுவையான பச்சை மிளகாய் ஊறுகாய் சாப்பிட தயார்.
இதை சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி, வெரைட்டி ரைஸ் என அனைத்துக்கும் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவை அள்ளும்.
இதில் வெல்லம், புளி அனைத்தும் சேரப்பதால் அதிக காரமாக இருக்காது. மற்ற எதற்கும்விட தயிர் சாதத்துக்கு தொட்டுக்கொள்ள சுவையில் அபாரமாய் அசத்தும்