அது உங்க பிரச்சனை!.. என்னால முடியாது!. கறாரா சொன்ன அஜித்?!.. என்னவாகுமோ விடாமுயற்சி!…
Vidamuyarchi: அப்டேட் கேட்ட காலம் போய் படம் ரிலீஸ் ஆனா போதும் என்ற மனநிலையில் இருக்கிறார்கள் அஜித் ரசிகர்கள். அதிலும் தற்போது சமீபத்திய சர்ச்சை ஒன்றும் உருவாகி இருப்பதால் படம் முடியுமா இல்லையா என்ற சந்தேகமே உலா வருகிறது. அதுகுறித்த அதிர்ச்சிகரமான தகவல்களும் கசிந்துள்ளது.
துணிவு திரைப்படத்தின் ரிலீஸை தொடர்ந்து அஜித் நடித்து வரும் படம் விடாமுயற்சி. இப்படத்தின் டைட்டில் கடந்த மே மாதம் அவர் பிறந்தநாளில் ரிலீஸ் ஆனது. ஆனால் அதை தொடர்ந்து படத்தின் எந்த அப்டேட்களுமே இல்லை. அஜித் ஜாலியாக பைக் டூர் சென்றார்.
வருவாரா? மாட்டாரா? என கேள்வி எழுந்த நிலையில் ஒருவழியாக படத்தின் பூஜை தொடங்கியது. படப்பிடிப்பும் அஜர்பைஜானில் நடந்து வருகிறது. அர்ஜூன், ஆரவ், த்ரிஷா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். ஆனால் இன்னமும் மொத்த படக்குழு குறித்த அப்டேட்கள் ரிலீஸ் ஆகவில்லை.
ஆனால் அஜித் பிப்ரவரி வரை தான். அதற்குள் முடிக்க சொல்லுங்கள் என கறாராக சொல்லிவிட்டாராம். ஏனெனில், உலகம் முழுவதும் பைக் டூர் செல்ல திட்டமிட்டிருக்கும் அஜித்துக்கு இன்னும் சில நாடுகள் பாக்கி இருக்கிறது. அங்கு அவர் செல்ல வேண்டும்.. ஆனால், இதை கேட்ட லைகா நிறுவனம் அதிர்ச்சியில் இருக்கிறார்களாம். மேலும் இந்த விஷயம் கசிந்துள்ள நிலையில், அப்போ மகிழ் திருமேனி மற்றும் அஜித் இடையில் சண்டை எனவும் தகவல்கள் தெரிவிக்கிறது.