விவசாய குடும்பத்தில் பிறந்து.. ரூ.1000 கோடி மதிப்புள்ள கம்பெனியின் தலைவரான ரமாகாந்த்!
1984 ஆம் ஆண்டில் அவரது குடும்பம் விவசாயம் அல்லாத வேறு புதிய வாய்ப்புகளைத் தேடி கொல்கத்தாவுக்குக் குடி பெயர்ந்தது. கொல்கத்தாவில் உள்ள ஸ்காட்டி கல்லூரியில் தனது பட்டப்படிப்பை முடித்தார். கல்வியில் தொடர்ந்து சிறந்து விளங்கிய ரமாகாந்த் 1996 ஆம் ஆண்டில் முதுநிலை படிப்பில் ஹானர்ஸ் பட்டப்படிப்பில் பர்ஸ்ட் கிளாஸில் தேர்ச்சி அடைந்தார். அதன் பின்னர் அவர் ஆல் இந்தியா போர்ட் தேர்வுக்கு தயாராகத் தொடங்கினார். இருப்பினும் அவரது வாழ்க்கை
இறுதியாக துறைமுகத் துறைக்கு கொண்டு சென்றது. உலகளவில் தனக்கென்று பெரிய நெட்வொர்க்கை ரமாகாந்த் உருவாக்கிக் கொண்டார். இந்த நேரத்தில்தான் ரமாகாந்த், கழிவு மேலாண்மை நிபுணர் எஸ்கே சௌத்திரியை சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றார். இருவருக்கும் நன்றாக ஒத்துப் போனது. 2006 ஆம் ஆண்டில் ரமாகாந்த் தனது பயோ கழிவு மெடிக்கல் பிளான்ட் அமைப்பதற்கு தனது சம்பளத் தொகை முழுவதும் தந்து சௌத்திரியை எடுத்தார். 2009 ஆம் ஆண்டில் சயின்டிபிக் வேஸ்ட் மேனேஜ்மென்ட் பிராக்டீஸஸில் ரமாகாந்த் கொண்டிருந்த அர்ப்பணிப்பினால் சிலிகுரியில் நாட்டின் முதல் மெடிக்கல் வேஸ்ட் பிளான்ட் தொடங்கப்பட்டது. 2011 ஆம் ஆண்டில் கிரீன்டெக் என்விரான் என்ற
கழிவு மேலாண்மை நிறுவனத்தை ரமாகாந்த் தொடங்கினார். 2014 ஆம் ஆண்டில் கொல்கத்தாவில் ஒரு கழிவு மேலாண்மை ஆலையை அமைப்பதற்கு நிறுவனம் அனுமதி பெற்றது. இப்போது இந்தியா முழுவதும் கிரீன்டெக் என்விரான் மேனேஜ்மெண்ட் பிரைவேட் லிமிடெட் ( Greentech Environ Management Pvt. Ltd.) முனிசிபாலிட்டி திடக் கழிவுகளை பிராசஸ் செய்து வருகிறது. முனிசிபாலிட்டி திட கழிவுகள், பயோரிமெடியேஷன், பயோ மைனிங் ஆப் லெகஸி வேஸ்ட், மேனேஜ்மெண்ட் சேவைகளுக்கான பயோ மெடிக்கல் வேஸ்ட்களை கையாண்டு வருகிறது. குறுகிய சில ஆண்டுகளுக்குள்ளேயே கிரீன்டெக் என்விரான் வெகுவாக வளர்ந்துவிட்டது. 2014 ஆம் ஆண்டில்
.30 லட்சமாக இருந்த டர்ன்ஓவர் 2022 நிதியாண்டில் ரூ.30 கோடியை எட்டியது. 2022-23 நிதியாண்டில் டெல்லி அரசுடன் செய்து கொண்ட ஒப்பந்தப் பணியைத் தொடர்ந்து அதன் டர்ன்ஓவர் 300 கோடியானது. 30,000 டன் முனிசிபாலிட்டி திடக் கழிவை தினமும் பிராசஸ் செய்யும் திறன் படைத்துள்ள கிரீன்டெக் இப்போது நாட்டின் முக்கியமான வேஸ்ட் மேனேஜ்மெண்ட் தொழில் நிறுவனமாக உருவெடுத்துள்ளது. அதன் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.1000 கோடியாகும். கிரீன்டெக்கில் 1000க்கும் மேற்பட்ட நிபுணர்கள் பணியாற்றுகின்றனர். 35 எக்ஸ்கவேட்டர்கள், 11 கிளீன்மான் இயந்திரங்கள் கொண்டு நொய்டா, டெல்லியில் 19000 முனிசிபாலிட்டி திடக் கழிவுகளை தினமும் பிராசஸ்
திடக் கழிவுகளை தினமும் பிராசஸ் செய்கிறது.