ப்போ தெரியுதா.. மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் “ஸ்நாக்ஸ்” ரேட் இவ்ளோ அதிகமா இருப்பது ஏன்னு?

டிக்கெட் விற்பனைதான் திரையரங்கின் முதலாவது பெரிய வருமான பிரிவில் வருகிறது என்றபோதிலும், உணவு விற்பனையில் கிடைக்கும் பணம், அதன் 2வது மிகப்பெரிய வருவாய் என்று தெரியவந்துள்ளது. 2023ம் நிதியாண்டில் உணவு மற்றும் பானங்களின் மூலம் பிவிஆருக்கு ரூ.1,618 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இது ஆண்டுக்கு ஆண்டு ஒப்பீட்டின்படி, 11 சதவீத வளர்ச்சியாகும். அதாவது 2022ம் ஆண்டுடன் ஒப்பிட்டால் 11 சதவீத வளர்ச்சியாகும். எப்படி இந்த வளர்ச்சி சாத்தியப்படுகிறது. மக்கள் தியேட்டர்களில் சாப்பிட வேண்டும்

சாத்தியப்படுகிறது. மக்கள் தியேட்டர்களில் சாப்பிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு போய் வாங்கி சாப்பிடுகிறார்களா.. அப்படியெல்லாம் இல்லை. பிறகு எப்படி இந்த வருவாய் பெருகுகிறது? சமீபத்தில் நொய்டாவிலுள்ள PVR சினிமாஸில் வெறும் 55 கிராம் சீஸ் பாப்கார்ன் மற்றும் 600 மில்லி பெப்சிக்கு ரூ.820 என்று பில் போடப்பட்டது சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டது. அமேசான் பிரைமுக்கான வருடாந்திர சந்தாவுடன் இந்தத் தொகையை ஒப்பிட்டு பார்த்த பலரும், தியேட்டர்களில் திரைப்படம் பார்ப்பது நடுத்தர குடும்பங்களுக்கு

சாத்தியப்படுகிறது. மக்கள் தியேட்டர்களில் சாப்பிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு போய் வாங்கி சாப்பிடுகிறார்களா.. அப்படியெல்லாம் இல்லை. பிறகு எப்படி இந்த வருவாய் பெருகுகிறது? சமீபத்தில் நொய்டாவிலுள்ள PVR சினிமாஸில் வெறும் 55 கிராம் சீஸ் பாப்கார்ன் மற்றும் 600 மில்லி பெப்சிக்கு ரூ.820 என்று பில் போடப்பட்டது சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டது. அமேசான் பிரைமுக்கான வருடாந்திர சந்தாவுடன் இந்தத் தொகையை ஒப்பிட்டு பார்த்த பலரும், தியேட்டர்களில் திரைப்படம் பார்ப்பது நடுத்தர குடும்பங்களுக்கு கட்டுப்படியாகாததாகிவிட்டதாக தெரிவித்திருந்தனர். இதற்குப்

பதிலடியாக, PVR சினிமாஸ், காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரையிலான வார நாள் உணவை ரூ.99க்கு அறிவித்தது, மேலும் வார இறுதி நாட்களில் பாப்கார்ன் மற்றும் பெப்சிக்கு ரீஃபில்லிங் செய்யும் வசதியை அறிவித்தது. ரூ.99க்கான உணவு மெனுவில் பர்கர்கள், சமோசாக்கள் மற்றும் சாண்ட்விச்கள் உள்ளன. இருப்பினும் ஒட்டுமொத்தமாக விலை குறையவில்லை என்றுதான் சொல்லவேண்டும். மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் சாப்பிட்டுக் கொண்டே படம் பார்ப்பதை இன்றைய இளம் தலைமுறை விரும்புகிறது. அதிக செலவினங்களை ஏற்றுக்கொள்ள மனம் இல்லாவிட்டாலும், வேண்டா விருப்பத்துடன் செய்தாக வேண்டிய கட்டாயத்தில் சிக்கியுள்ளார்கள்

பெற்றோர்கள். திரையரங்குக்கு உள்ளே வீட்டிலிருந்து எடுத்துச் செல்லப்படும் உணவுகள் அனுமதிக்கப்படுவது கிடையாது. இது திரையரங்க உரிமையாளர்களுக்கு இன்னும் சாதகமாகிவிட்டது. தியேட்டர்களுக்குள், வெளி உணவுகளை கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில் அது போன்ற அனுமதி தர முடியாது என்று உச்சநீதிமன்றமும் தெரிவித்துவிட்டது. தங்களது “இருக்கைகளை, தூய்மைப்படுத்த முடியாத அளவுக்கு மாற்றிவிடும் தன்மை வழிந்து ஓடக்கூடிய உணவுகளுக்கு இருப்பதால், அதுபோன்ற உணவுகளை மக்கள் கொண்டுவந்துவிட்டால் என்ன

செய்வது..” என்று திரையரங்கு உரிமையாளர்கள் முன்வைத்த வாதத்தை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. சென்னையில் புதிய திரையரங்கு.. பிவிஆர் – ஐநாக்ஸ் கூட்டணி அசத்தல்.. எங்கே தெரியுமா..? இருப்பினும் திரையரங்கம் உள்ளே உள்ள ஸ்டால்களிலும், வழிந்து ஓடக்கூடிய பொருட்களின் விற்பனை இப்பவும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றது. இதனால் இருக்கைகள் பாழாகி கொண்டுதான் இருக்கின்றன. அந்த அழுக்கை துடைத்து போட்டுக் கொண்டு லாபம் சம்பாதித்து கொண்டுதான் இருக்கின்றனர் திரையரங்கு உரிமையாளர்கள். 31 சதவீத வருவாய் இப்படி அதிக விலைக்கு விற்கும் உணவுகளால்தான்

கிடைக்கிறது எனும்போது மல்டிபிளக்ஸ்கள் ஏன் உணவு விலையை கூட்டி விற்க மாட்டார்கள்? கண்டிப்பாக செய்யத்தான் செய்வார்கள். மல்டிபிளக்ஸ்களில் படங்களுக்கு இடையே, நல்ல நல்ல பிராண்ட்கள், தங்களது நிறுவனங்கள் அல்லது பொருட்களை, விளம்பரம் செய்ய பணம் தருகின்றன. அப்படியிருந்தும், விளம்பரத்தால் கிடைக்கும் வருவாய் பிவிஆரின் மொத்த வருவாயில் வெறும் 6 சதவீதம் மட்டுமேயாகும். இப்போது புரிகிறதா, ஏன் தியேட்டர்கள் உணவு பொருட்களை வெளியிலிருந்து எடுத்துச் செல்ல அனுமதிப்பதில்லை என்பது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *