இது தெரியுமா ? தினமும் இதை செய்தால் உங்கள் சருமத்தில் உள்ள ஏஜ் ஸ்பாட்ஸ் மறையும்..!
கம், கழுத்து, தோள்பட்டை, கை, முதுகு, மார்பு போன்ற இடங்களில் தோன்றுகிறது ஏஜ் ஸ்பாட்ஸ். ஏஜ் ஸ்பாட்ஸ் பொதுவாக பிரவுன் ஸ்பாட்ஸ் அல்லது லிவர் ஸ்பாட்ஸ் என்று அழைக்கப்படுகிறது.
தொடர்ச்சியான சூரிய ஒளி அந்த பகுதிகளில் படும் போது தோலில் உள்ள மெலனோசைட் நிற மாறி தோலில் அடர்ந்த புள்ளிகளை உண்டாக்குகிறது. இது அபாயமானது கிடையாது. இது பொதுவாக வயதான ஒரு தோற்றத்தை ஏற்படுத்தும். இதற்காக நாங்கள் உங்களுக்கு எளிய இயற்கை வழிகள் கூறுகிறோம்
ஆப்பிள் சிடார் வினிகர் ஒரு சிறந்த சருமத்திற்கு புத்துயிர் கொடுக்கும் பொருளாக செயல்படுகிறது. இதில் ஆல்பா ஹைட்ராக்ஸி அமிலம் உள்ளது. இது சருமத்தில் உள்ள இறந்த செல்களை அழிக்கிறது.
ஒரு காட்டன் பஞ்சில் ஆப்பிள் சிடார் வினிகரை எடுத்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவிக் கொள்ளவும்
இரவு முழுவதும் அப்படியே விட்டு விடவும்
நீங்கள் சென்ஸ்டிவ் சருமம் பெற்றிருந்தால் இதனுடன் ஆலிவ் ஆயில் சேர்த்து கொள்ளவும். ஆலிவ் ஆயில் சருமம் வறண்டு போவதை தடுக்கும்.நல்ல மாற்றம் பெற இந்த முறையை தினமும் செய்யவு.
பயன்படுத்தும் முறை
எலும்பிச்சையில் இயற்கையான ப்ளீச்சிங் பொருள் உள்ளது. எனவே இது சருமத்திற்கு ஒரு ப்ளீச்சிங் ஏஜென்ட்டாக செயல்படுகிறது. இது உங்கள் சருமத்தில் உள்ள மெலனின் நிறமியை உடைத்து சருமத்திற்கு புத்துயிர் கொடுக்கிறது.
இதை அப்ளே செய்த பிறகு நீங்கள் சூரிய ஒளியில் செல்ல கூடாது. ஏனெனில் இது உங்கள் சருமத்தை மேலும் கருமையாக்கும்.
உங்கள் சருமம் சென்ஸ்டிவ் சருமமாக இருந்தால் எலும்பிச்சை அரிப்பு மற்றும் சிவந்த நிறத்தை உங்கள் தோலில் ஏற்படுத்தும். எனவே எலும்பிச்சையை மறக்காக ரோஸ் வாட்டரில் கலந்து கொண்டு பயன்படுத்துங்கள்.
எலும்பிச்சையை துண்டுகளாக்கி பாதிக்கப்பட்ட சருமத்தில் தடவ வேண்டும்
இப்பொழுது இந்த ஜூஸை 15-20 நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும்.
பிறகு சாதாரண நீரில் கழுவவும்
உங்கள் தோலில் உள்ள புள்ளிகள் மறையும் வரை இதை தினமும் செய்யவும்.
3.பட்டர் மில்க்கில் நிறைய லாக்டிக் அமிலம் உள்ளது. இது ஏஜ் ஸ்பாட்ஸ்யை நீக்கி சருமத்தை வெண்மையாக்குகிறது. இது உங்கள் சருமத்திற்கு எந்த எரிச்சலையும் ஏற்படுத்தாது.
ஒரு கப்பில் பட்டர் மில்க்கை எடுத்து கொள்ளவும்
அதில் காட்டன் பஞ்சை நனைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவ வேண்டும்
பிறகு 15-20 நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும்
சாதாரண நீரில் கழுவவும்
எண்ணெய் சருமமாக இருந்தால் இதனுடன் எலும்பிச்சை ஜூஸ் கலந்து கொள்ளவும்
உங்கள் சரும புள்ளிகள் போகும் வரை தினமும் இதை தடவவும்.