Weight Gain : எடை அதிகரித்துக்கொண்டே செல்கிறதா? இந்த பழக்கங்களுக்கும் அதில் தொடர்பு இருக்கலாம்!
அதிகளவு உடல் எடை அதிகரிப்பு, பல்வேறு உடல் நலக்கோளாறுகளை ஏற்படுத்துகிறது. முக்கிய உறுப்புகளில் பிரச்னைகள் ஏற்படுவதால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது. இது உங்கள் இதய நோய், மூட்டு வலிகள் ஆகிய அனைத்தையும் பாதிக்கிறது. நீண்ட கால பிரச்னைகளில் இது அதிக ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது. குறிப்பாக இதய நோய், நீரிழிவு மற்றும் உயர்ரத்த அழுத்தம் போன்றவற்றில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
பின்னரவில் ஸ்னாக்ஸ் சாப்பிடுவீர்களா?
இரவு படுக்கைக்கு செல்லும் நேரத்தில் அதிக கலோரிகள் கொண்ட ஸ்னாக்ஸ் சாப்பிட்டால் அது உடல் எடையை அதிகரிக்கும். படுக்க செல்வதற்கு 2 மணி நேரத்திற்கு முன்னர் சரிவிகித சத்துக்கள் நிறைந்த இரவு உணவை உட்கொள்ள வேண்டும். அப்படி இரவில் பசித்தால் கிரீக் யோகர்ட் போன்ற ஸ்னாக்ஸ் மற்றும் சிறு துண்டு பழங்கள் எடுத்துக்கொள்வது நல்லது.
உறங்கச்செல்லும் முன் செல்ஃபோன் பயன்படுத்துவீர்களா?
செல்ஃபோன்கள், டேப்லெட்கள், கம்ப்யூட்டர் திரைகள் வெளியிடும் ஊதா வெளிச்சம், உங்கள் உடல் சுரக்கும் மெலடோனின் உறக்கத்தின் தரத்தை பாதிக்கும். திரை இல்லாத படுக்கை நேரத்தை உறுதிப்படுத்துங்கள்.
படுக்கைக்கு செல்லும் முன் குறைந்தது அரைமணி நேரத்திற்கு முன்னர் திரையை அணைத்துவிடவேண்டும். புத்தகம் வாசிப்பது, அமைதிக்கான வழிமுறை அல்லது உங்களுக்கு பிடித்த அமைதி பயிற்சி என ஏதேனும் ஒன்றை செய்ய வேண்டும்.
நீங்கள் எத்தனை மணி நேரங்கள் உறங்குகிறீர்கள்?
முறையற்ற உறக்கம் உங்கள் உடலின் சர்கார்டியன் ரிததத்தை பாதிக்கும். உங்கள் உடலின் சிர்கார்டியன் ரிதம் என்பது உங்கள் உடலில் உறக்கம் மற்றும் விழிப்பு சைக்கிளை முறைப்படுத்தும் ஒன்று. இது உங்கள் உடலின் வளர்சிதை மாற்றம் மற்றும் ஹார்மோன்களை முறைப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
வழக்கமான உறக்க நேரம் ஒவ்வொரு இரவும் 7 முதல் 9 மணி நேரம் கட்டாயம் செய்ய வேண்டும். ஒரே நேரத்தில் உறங்கி ஒரே நேரத்தில் எழுந்திருக்க வேண்டும் அது உங்கள் உடல் நலனுக்கு நல்லது. வார இறுதி நாட்கள், விடுமுறை நாட்கள் என எதிலும் மாற்றம் செய்யக்கூடாது.
மனஅழுத்தத்தில் இருக்கிறீர்களா?
உங்களுக்கு மனஅழுத்தம் ஏற்பட்டால், அது உங்கள் உடலில் கார்டிசால் சுரப்பை அதிகரிக்கிறது. நீண்ட கால மனஅழுத்தம் உங்கள் உடலில் எடையை குறைக்க நீங்கள் செய்யும் முயற்சிகளை பாதிக்கும். எனவே உறங்க செல்வதற்கு முன், மனஅழுத்தத்தை குறைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுங்கள். அது மூச்சுப்பயிற்சி, தியானம் அல்லது யோகா என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
அடிக்கடி மது அருந்தும் பழக்கம் கொண்டவரா?
முதலில் ஆல்கஹால் உங்களுக்கு மயக்கத்தை கொடுத்து உறக்கத்தை ஏற்படுத்தினாலும், நீண்ட நாட்கள் எடுத்துக்கொண்டால் அது உங்கள் உறக்கத்தை பாதிக்கும். தூக்கத்தின் தரத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே ஆல்கஹால் உட்கொள்வதை குறைத்தல் அல்லது தவிர்த்தால் நலம். அதற்கு பதில் மூலிகை தேநீர் அல்லது தண்ணீர் என அந்தப்பழக்கத்தை மாற்ற வேண்டும்.
உங்களின் உறக்கத்தின் தரம் நன்றாக உள்ளதா?
நீண்ட நேரம் உறக்கம் மட்டுமல்ல உங்கள் உறக்கம் நல்ல தரமானதாக இருக்க வேண்டும். போதியஅளவு ஆழ்ந்த உறக்கமாக இருக்க வேண்டும். அதுவும் உங்கள் உடல் எடையை குறைப்பதை பாதிக்கும். உறக்கப்பிரச்னைகளை நீங்கள் நன்றாக கையாண்டாலே அது உங்கள் ஒட்டுமொத்த உடல் நலனையும் பாதிக்கும். உங்கள் உடல் எடையிழப்பு பயணத்தில் உங்களுக்கு உதவும்.
உறங்கச்செல்வதற்கு முன் காபி அல்லது தேநீர் பருகக்கூடாது
மாலை அல்லது இரவு நேரத்தில் காபி உணவுகளை உட்கொண்டால் உடலுக்கு நல்லதல்ல. அதுவும் உங்கள் உறக்கத்தை பாதிக்கும். எனவே மாலை மற்றும் இரவு நேரங்களில் அதிகம் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். எனவே காஃபைன் இல்லாத பானங்களை அருந்துங்கள்.
நல்ல இரவு உணவை உட்கொள்ளுங்கள்
அதிக பசியுடன் உறங்கச்சென்றால், உங்கள் உடல் நலனை அது பாதிக்கும். உறக்கத்தையும் சீர்குலைக்கும். பசியின் அறிகுறிகளை நீங்கள் உதாசீனப்படுத்தினால் அது உங்கள் உடல் உறக்கத்தை பாதிக்கும். அதேபோல் அதிகம் சாப்பிட்டாலும் அது உங்கள் உடலை பாதிக்கும். எனவே உங்கள் உடலின் தேவை அறிந்து நடந்துகொள்வது உங்கள் ஒட்டுமொத்த உடல் நலனுக்கும் நல்லது.