67 years of Bhakta Markandeya: 16 வயது சிறுவனின் மெச்ச வைத்த சிவபக்தி.. நீண்ட ஆயுளைப்பெற்ற மார்க்கண்டேயரின் கதை!

பக்த மார்க்கண்டேயா திரைப்படம் வெளியாகி 67 வருடங்கள் ஆகின்றன. அப்படம் குறித்த சிறப்புப் பார்வை..

பி.எஸ்.ரங்கா இயக்கத்தில் 1957ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் பக்த மார்க்கண்டேயா. இப்படத்தில் வி.நாகையா,கே.ஏ. தங்கவேலு, மாஸ்டர் ஆனந்த் எனப் பலர் நடித்து இருந்தனர். இப்படம் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் கன்னடத்தில் அந்தந்த மொழிபேசும் நடிகர்களை வைத்து படமாக்கப்பட்டு,ஒரே நேரத்தில் ரிலீஸானது.

பக்த மார்க்கண்டேயா படத்தின் கதை என்ன?

உலகில் பிறக்கும் உயிர்களின் உயிரைப் பறிக்கும் கடவுளாக எமன் இருக்கிறார். எமனை இந்தப் பணியை செய்யும் கடவுளாக சிவபெருமான் கட்டளை விதிக்கிறார். எனவே, எமனும் அந்தப் பணிகளைச் செய்கிறார்.

இந்நிலையில் நீண்டநாட்களாக குழந்தையின்றி தவித்த மிருகண்ட மகரிஷிக்கும் அவரது மனைவிக்கும் குழந்தை வரம் தந்து அருள்கிறார், சிவபெருமான். அதைத் தொடர்ந்து அவருக்குப் பிறக்கிற குழந்தை தான், மார்க்கண்டேயர். ஆனால், அவருக்கு 16 ஆண்டுகள் மட்டுமே வாழமுடியும் என விதியுள்ளது. தவிர, மார்க்கண்டேயர் மிகச்சிறந்த சிவபக்தராக இருக்கிறார்.

துரதிர்ஷ்டவசமாக 16 வயது நிறைவடைந்தவுடன், மார்க்கண்டேயரின் உயிரைப் பறிக்க வருகிறார், எமன். ஆனால் பயத்தில் மார்க்கண்டேயர் அருகிலுள்ள ஆலயத்தில் இருக்கும் சிவலிங்கத்தைக் கட்டிப் பிடித்து அழுகிறார். அப்போது, சிவபெருமான் எமனின் முன்பு தோன்றி, மார்க்கண்டேயரின் உயிரைப் பறிக்கக் கூடாது எனக் கட்டளையிட்டு, அவரை ஆசீர்வதிக்கிறார். இதனால் மார்க்கண்டேயர் என்றும் 16 வயதுடையவராக இறப்பில்லாதவராக மாறுகிறார்.

எம பயத்தில் இருப்பவர்கள், எல்லாம் வல்ல ஈசனை வழிபட்டால் வேதனைப் படத்தேவையில்லை என்பதே கதை சொன்ன மெசேஜ். இப்படத்தில் மார்க்கண்டேயராக மாஸ்டர் ஆனந்த் நடித்திருந்தார்.

வி. நாகய்யா,புஷ்பவல்லி, கே.ஏ.தங்கவேலு, பாபுஜி, பத்மினி பிரியதர்ஷினி, சாய்ராம், பாலசரஸ்வதி, சூர்யா கலா, லட்சுமிகாந்தம், ஆர்.நாகேந்திர ராவ், சுந்தரம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்துக்குண்டான இசையை விஸ்வநாதன் – ராமமூர்த்தி ஆகியோர் இணைந்து செய்தனர். இப்படத்தை இயக்கி தயாரித்தவர், இயக்குநர் பி.எஸ்.ரங்கா. ஒளிப்பதிவு பணியினை வெங்கடாச்சாரி செய்திருந்தார்.

படம் வெளியாகி 67 வருடங்கள் ஆனாலும் இப்படம் புராண காலத்து கதையை அறியச் செய்வதால் இன்னும் இப்படத்தைப் பார்த்தாலும் சுவாரஸ்யம் குறையாது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *