Mounica interview: ‘இன்னொருத்தர் புருஷனோட.. அது தப்புதான்.. பாலு வாங்கிய இரண்டு சத்தியங்கள்’ – காதல் கதையை சொன்ன மோனிகா!
இதில் நமக்கு எங்கே வாய்ப்பு கிடைக்கப் போகிறது என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அப்போதுதான் பாலு மகேந்திரா என்ற திமிங்கலம் அங்கிருந்து வந்தது. அவர் முன்னால் நான் மிகவும் நேராக உட்கார்ந்திருந்தேன். அப்போது அவர் என்ன ஸ்கேலை முழுங்கியது போல உட்கார்ந்திருக்கிறாய் என்று கிண்டலடித்தார்.
பிரபல நடிகையான மோனிகா பாலுமகேந்திரா இன்னொரு பெண்ணுடைய கணவர் என்று தெரிந்தும் அவருடன் காதல் கொண்டிருந்தார். அந்தக் காதலால் அவர் பல்வேறு பிரச்சினைகளையும் எதிர்கொண்டார்.
இது குறித்து சினிமா விகடன் யூடியூப் சேனலுக்கு கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் அவர் கொடுத்த பேட்டியில் பேசினார்.
இது குறித்து அவர் பேசும் போது, “அப்போது எனக்கு 18 வயது தான் பாலு மகேந்திராவின் உதவி இயக்குநர் ஒருவர், என்னை அவர் பார்க்க விரும்புவதாக சொல்லி வந்தார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. உடனே நான் பதறியடித்து, அவரது அலுவலகம் எங்கே, எத்தனை மணிக்கு வர வேண்டும் உள்ளிட்ட எல்லா விவரங்களையும் மிகவும் பதட்டமாக கேட்டேன்.
அதன் பின்னர் அடுத்த நாள் காலை அவரை சந்திக்க சென்றேன் அங்கு அவரது படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்காக வாட்டம் சாட்டமாக அழகான பெண்கள் பலர் நின்று கொண்டிருந்தார்கள் அதை பார்த்தவுடனே நான் அப்படியே அப்சட் ஆகிவிட்டேன்.
இதில் நமக்கு எங்கே வாய்ப்பு கிடைக்கப் போகிறது என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அப்போதுதான் பாலு மகேந்திரா என்ற திமிங்கலம் அங்கிருந்து வந்தது. அவர் முன்னால் நான் மிகவும் நேராக உட்கார்ந்திருந்தேன். அப்போது அவர் என்ன ஸ்கேலை முழுங்கியது போல உட்கார்ந்திருக்கிறாய் என்று கிண்டலடித்தார்.
இதனையடுத்து நான் கொண்டு வந்த ஆல்பத்தை அவரிடம் காண்பித்தேன். அதை புரட்டிப் பார்த்தவர் தயவு செய்து இதை வேறு எங்கேயும் காண்பிக்காதே என்று சொன்னார். அதனை தொடர்ந்து தான் அவர் என்னை முதன்முறையாக புகைப்படம் எடுத்தார்
இப்படித்தான் அவருடன் முதல் அறிமுகம் இருந்தது. நாங்கள் இரண்டு பேரும் காதலித்தபோது அவரை நான் மிஸ்டர் மகேந்திரா என்று அழைப்பேன். அவர் அதற்கு என்னை மிஸ்சஸ் மகேந்திரா என்று அழைப்பார். இப்படி நான் அவரை மிகவும் உரிமையாக பட்டப்பெயர்கள் வைத்து அழைப்பேன்.
அவர் இறக்கும்போது என்னிடம் இரண்டு சத்தியங்கள் வாங்கிக் கொண்டார். ஒன்று நான் சினிமாவில் தொடர்ந்து பயணிக்க வேண்டும் என்பது. அதற்கு காரணம் இருக்கிறது. அதாவது அந்த சமயத்தில் குடும்பச் சூழல் காரணமாக, நான் பிசினஸ், ரியல் எஸ்டேட் உள்ளிட்டவற்றில் கொஞ்சம் பிசியாக இருந்தேன். அது அவருக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.
அப்போது அவர் நீ ஒரு சிறந்த நடிகை வாழ்க்கை. நாம் சிக்கனமாக வாழ்ந்து கொள்ளலாம். ஆகையால், உனக்கு பிடித்த படங்களில் நீ நடிக்கலாமே என்று கேட்டு, சினிமாவில் பயணிக்க வேண்டும் என்று சொன்னார்.
இன்னொரு சத்தியம். நான் அவர் இறந்த பிறகு நான் இன்னொரு கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்பது. அப்போது நான் அவரிடம் நான் கல்யாணமே செய்து கொள்ள மாட்டேன் என்று சொல்லவில்லை.
ஆனால் அதற்கு என்னுடைய மனமானது ரெடியாக வேண்டும். அது ரெடியாகாமல் நான் திருமண வாழ்க்கைக்குள் செல்வது என்பது சரியாக இருக்காது.