Venkat Prabhu: விஜயை கேவலமாக விமர்சித்த சத்யன்; வேட்டியை மடித்து கட்டி பதிலடி கொடுத்த வெங்கட்!

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் புத்தாண்டையொட்டி வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. சொன்ன படியே புத்தாண்டு தின சிறப்பு பரிசாக, நேற்றைய தினம் சரியாக மாலை 6 மணிக்கு விஜயின் 68 வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வெளியிடப்பட்டது.

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வருவது அனைவரும் அறிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்த நிலையில், அடுத்ததாக தாய்லாந்து மற்றும் துருக்கியில் படப்பிடிப்பு நடக்க படக்குழு திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் புத்தாண்டையொட்டி வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. சொன்ன படியே புத்தாண்டு தின சிறப்பு பரிசாக, நேற்றைய தினம் சரியாக மாலை 6 மணிக்கு விஜயின் 68 வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வெளியிடப்பட்டது.

அதன் படி, படத்திற்கு கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என பெயர் வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இந்த நிலையில் இன்று மாலை படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியிடப்பட்டது.

கோட் படத்தை பொருத்தவரை, ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் நடித்து 2019- ல் வெளியான ஜெமினி மேன் என்ற ஹாலிவுட் படத்தின் கதையை அடிப்படையாக வைத்து விஜய்யின் தி கிரேடட்ஸ்ட் ஆஃப் ஆல் டைம் உருவாகி வருவதாகவும், அந்த படத்தில் வில் ஸ்மித்திற்கு மூன்று வேடங்கள் இருந்தது போல, விஜய்க்கும் இந்த படத்தில் வேடங்கள் இருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகின.

விஜயை பற்றி தொடர்ந்து நெகட்டிவாக பேசி வரும் சத்யன் விஜயால் இப்படிப்பட்ட கதையை தாங்க முடியுமா? தயவு செய்து அவருக்கு தெலுங்கு ரீமேக் ஏதாவது கொடுங்கள் என்று சரமாரியாக விமர்சனம் செய்து அந்த பதிவில் வெங்கட் பிரபுவையும் டேக் செய்திருந்தார்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *