உணவில் கலந்திருக்கும் கலப்படங்களை கண்டுபிடிப்பது எப்படி?

எங்கும் கலப்படம் எதிலும் கலப்படம் இன்றைக்கு உள்ள நாகரீக வாழ்க்கையில் அனைத்தும் வியாபார உத்தியாகவே பார்க்கப்படுகிறது.

மக்களின் நலன், மக்களின் சுகாதாரம், மக்களின் பாதுகாப்பு எப்படி இருந்தால் என்ன தனக்கு வியாபாரமாக வேண்டும். தான் நன்றாக இருக்க வேண்டும் என்கின்ற எண்ணத்தில் இதை செய்கிறார்கள்.

இதை நம்பி வாங்கி பயன்படுத்துவதன் மூலம் நமது உடலில் கெட்டது சேர்ந்து நம் உடல் மற்றும் ஆரோக்கியம் சீக்கிரமாக பாலாகி போய்விடும். அதனால் ஒரு முறைக்கு இருமுறை அந்த பொருளை கவனித்து வாங்குங்கள்.

1. நெய்

முதலில் கடைகளில் வாங்கும் நெய்யை எடுத்துக் கொள்ளவும். எடுத்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும். அந்த நெய்யில் டிஞ்சர் அயோடின் என்று சொல்லக்கூடிய திரவத்தை சேர்க்கும் பொழுது அது கருப்பாக மாறினால் நெய் கலப்படம் ஆகியுள்ளது என்று பொருள். வண்ணம் மாறவில்லை என்றால் தூய்மையான நெய் என்று பொருள்.

2. பால்

ஒரு தட்டை எடுத்துக் கொள்ளுங்கள். சாய்வாக பிடித்துக் கொள்ளுங்கள். உங்கள் வீட்டில் கருப்பு நிற போர்டு இருந்தால் எடுத்துக் கொள்ளுங்கள். தட்டின் மேற்பரப்பிலிருந்து விடுங்கள். அப்படி விடும் பொழுது பால் மிக மெதுவாகவும் பால் கீழே இறங்கும் சுவடு மேலிருந்து கீழ் வரை உங்களுக்கு தெரியும். அப்படி தெரிந்தால் அது பால் நீர் கலக்காதது.

சீக்கிரமாக கீழே இறங்கி அந்த சுவடு தெரியாமல் இருந்தால் பாலில் நீர் கலக்கப்பட்டுள்ளது.

3. மிளகாய் பொடி

ஒரு கண்ணாடி தம்ளரில் நீரை எடுத்துக் கொண்டு அதில் மிளகாய்ப் பொடியை தூவவும். மரத்தூள் நீரின் மேற்பரப்பில் மிதக்கும். மிளகாய் பொடி நீரின் அடியில் தங்கும். நிறமிகள் சேர்க்கப்பட்டிருந்தால் அந்த டம்ளர் முழுவதும் சிகப்பு நிறமாக காட்சியளிக்கும்.

4. பெருங்காயம்:

துருப்பிடிக்காத கரண்டியில் சிறிதளவு பெருங்காயத்தை எடுத்து நெருப்பில் எரிக்கவும். தூய பெருங்காயம் கற்பூரம் எரிவது போல பிரகாசமான ஒளியுடன் எரியும். கலப்பட பெருங்காயம் அப்படி எரியாது.

5. தேன்

ஒரு டம்ளரில் தேனை எடுத்து ஊற்றினால் தேன் கரையக் கூடாது. உண்மையான தேன் நீரில் கரையாது. அதேபோல் தீக்குச்சியில் தேனை தடவி பற்ற வைத்தாலும் எரியும்.அப்படி எரியவில்லை என்றால் அது தேன் கலப்படமானது.

உண்ணும் உணவில் அதிகமான கலப்படங்கள் ஏற்படுகின்றது. அதனால் வாங்கும் முன் அதை சோதித்துப் பார்த்துவிட்டு வாங்குங்கள்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *