விஜயகாந்தோடு நடிக்க மறுத்த பிரபல நடிகை!.. வீட்டுக்கே போய் சம்பவம் செய்த கேப்டன்…

Vijaykanth: 80களில் தமிழ் திரையுலகில் ரஜினி, கமல், மோகன் போன்ற சில ஹீரோக்கள் கோலோச்சிக் கொண்டிருந்த போதே அதிரடியாய் நுழைந்தவர்தான் விஜயகாந்த், விஜயராஜ் என்கிற அவரின் பெயர் சினிமாவுக்காக விஜயகாந்த் ஆனது. ஆங்கிலத்தில் Angry young man என சொல்வார்கள். பெரும்பாலான படங்களில் அப்படித்தான் விஜயகாந்த் நடித்தார்.

மக்களுக்கும் அது பிடித்திருந்தது. இவரின் படங்களில் அநியாயங்களை தட்டி கேட்டும் நபராக வருவார். அதாவது சினிமாவில் ஆக்‌ஷன் ஹீரோவாக மாற எம்.ஜி.ஆரின் ரூட்டிலும், ரஜினியின் ரூட்டிலும் பயணித்தார். இவரின் படங்களில் சண்டைக்காட்சிகளில் பிரதானமாக இருக்கும் என்பதாலேயே ரசிகர்கள் தியேட்டருக்கு போனார்கள்.

80,90களில் பல சில்வர் ஜூப்ளி படங்களை கொடுத்தவர் இவர். ராதிகா, ராதா, அம்பிகா, ரேகா என பல நடிகைகளுடனும் ஜோடி போட்டு நடித்திருக்கிறார். ஆனால், துவக்கத்தில் விஜயகாந்துக்கு ஜோடியாக நடிக்க எந்த நடிகையும் முன்வரவில்லை என்பதுதான் நிஜம். இதுபற்றி பேட்டி ஒன்றில் விஜயகாந்த் கூறியது இதுதான்.

சினிமாவில் பல அவமானங்களை சந்தித்திருக்கிறேன். பார்வையின் மறுபக்கம் படப்பிடிப்புக்காக ஊட்டி சென்று காத்து கிடந்தேன்.எனக்கு ஜோடியாக நடிக்கவிருந்த ஸ்ரீபிரியா வரவே இல்லை. விசாரித்ததில், என்னோடெல்லாம் நடிக்க மாட்டேன்னு அவங்க சொன்னதா கேள்விப்பட்டேன். இத ஒருமுறை அவங்ககிட்டயே கேட்டேன். அதேமாதிரி, சரிதாவும் என்னோடு நடிக்கமாட்டேன்னு சொன்னாங்க.

அவங்களோட நான் நடிக்கமாட்டேன்னு சொன்னதா அவங்ககிட்ட யாரோ சொல்லிட்டாங்க. நான் நேரா சரிதா வீட்டுக்குபோனேன். அவங்க அம்மாவும், சகோதரியும் இருந்தாங்க. ’உங்க பொண்ணோட நடிக்கமாட்டேன்னு நான் சொல்லவே இல்லை. மத்தவங்க சொல்றத நம்பாதீங்க. ஏதோ உங்க பொண்ணு கூட நடிச்சாதான் எனக்கு வாழ்க்கைன்னு நினைச்சி இங்க வந்து பேசுறதா நினைக்காதீங்க. கலைஞர்களிடம் உட்பூசல் இருக்கவே கூடாது. அதுக்காகத்தான் வந்தேன்’ அப்டின்னு சொல்லிட்டு வந்துட்டேன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *