படத்தின் இரண்டாம் பாதியை முதலில் ரிலீஸ் செய்த தியேட்டர்… அதனாலேயே சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம்..!
AVM Movie: தமிழ் சினிமாவில் ஒரு படம் வெற்றி பெற ஏகப்பட்ட காரணம் இருக்கும். ஆனால் ஒரு தியேட்டர்காரர் செய்த விஷயத்தால் படம் மாஸ் ஹிட் அடிக்கும் என்பதை நம்ப முடிகிறதா? அப்படி ஒரு சம்பவமும் தமிழ் திரையுலகில் நடந்து இருக்கிறது.
ஏவிஎம் நிறுவனம் தயாரிப்பில் உருவான திரைப்படம் மெல்ல திறந்தது கதவு. இப்படத்தில் மோகன், ராதா, அமலா, விசு, கமலா காமேஷ், செந்தில் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் தான் மோகனுக்கு ஏவிஎம் புரோடக்ஷனில் முதல் திரைப்படம். இப்படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்து இருந்தார்.
குழல் ஊதும் கண்ணனுக்கு பாட்டை இளையராஜா இசையமைத்து இருந்தார். இப்படத்தில் மோகனுக்கும், முஸ்லீமான அமலாவுக்கும் காதல் இருக்கும். இதில் அமலாவின் முகத்தினை அவர் பாத்திருக்கவே மாட்டார். ஒருநாள் அவர்கள் பார்க்கலாம் என வரும்போது புதைகுழியில் சிக்கி உயிரிழந்து விடுவார். அதனால் மோகன் திருமணத்தின் மீதே ஆசை இருக்காது.
இந்த நேரத்தில் ராதா, மோகன் மீது காதல் கொள்வார். மோகனின் அப்பா கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்த போது மோகன் ஒத்துக்கொள்ள மாட்டார். இதையடுத்து அதே புதைக்குழியில் விழுந்து ராதா உயிர் விட துணியும் போது அவரை காப்பாற்றி இருவரும் ஒன்று சேர்ந்து விடுவர்.
இந்த திரைப்படம் ரிலீஸ் ஆகி முதல் சில வாரம் சரியாக செல்லவில்லை. மதுரையை சேர்ந்த ஒரு தியேட்டர் உரிமையாளர் இரண்டாம் பாதியை முதலில் திரையிட்டார். இதையடுத்து படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதை தொடர்ந்து, படம் மிகப்பெரிய ஹிட் கொடுத்தது.
இருந்தும் ஏவிஎம் நிறுவனம் இப்படத்தினை மீண்டும் சென்சாருக்கு அனுப்பி சான்றிதழ் வாங்கியதாம். அப்போ ஒரு அதிகாரி கூட இப்போ என்ன டைட்டில்,மெல்ல திறந்தது கதவா? கதவு திறந்தது மெல்லவா என கலாய்த்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது.