Relationship : காதலர்களுக்கிடையில் ‘I Love You’வைவிட சிறந்த வாக்கியம் இருக்க முடியுமா? அவை என்ன என்று பாருங்கள்!
I Love You சொல்வதைவிட அன்புதான் அதிகம் பேசவேண்டும். இதைவிட இதயத்தை தொடக்கூடிய வாசகங்கள், ஆழ்ந்த பற்றுடன் அழகாக வெளிப்படுத்த முடியும். இதில் அதிக அர்த்தங்கள் நிறைந்துள்ளது. இந்த வார்த்தைகளை நீங்கள் கூறும்போது, இது உள்ளத்தை உருக்குவதாக உள்ளது.
என் வாழ்வின் மிச்ச காலங்களை நான் உன்னுடன் செலவிட விரும்புகிறேன்
இந்த வாசகத்தை நீங்கள் கூறும்போது நான் உன்னை விரும்புகிறேன் அல்லது காதலிக்கிறேன் என்பதை மிகவும் அழகாக கூறும் விதங்களுள் ஒன்று. வாழ்நாள் முழுவதும் ஒன்றாக கழிப்பது என்பதை மையப்படுத்தும் இந்த வாசகம் உங்களை காதலை மிக வலுவாக சொல்லக்கூடிய ஒன்றாகும். இது காதலை கடந்து உங்களை மகிழ்விக்கும் வாசகம் ஆகும்.
நான் உனக்காக மலைகளையும் அசைப்பேன்
இது உங்கள் காதலில் நீங்கள் எவ்வளவு அர்ப்பணிப்புடன் இருக்கிறீர்கள், உங்களின் தியாக உணர்வையும் இது காட்டுகிறது. இது எந்த சவாலையும் சேர்ந்து சந்திக்கலாம், உன்னுடன் சேர்ந்து தடைகளை கடக்க முடியும். நமது நலன் மற்றும் மகிழ்ச்சிக்கு உத்ரவாதம் கொடுக்கிறது.
நீ யார் என்பதற்காக நான் உன்னை காதலிக்கிறேன்
இந்த வாசகம், நீ யாராக வேண்டுமானாலும் இரு. அதைத்தான் விரும்புகிறேன். நீ நீயாக இருப்பதற்காகத்ததான் உன்னை விரும்புகிறேன் என்ற வார்த்தை மிகவும் மனதை தொடும் வகையில் அமையும். நீங்கள் ஒருவரை எப்படி இருந்தாலும் ஏற்றுக்கொள்வது அவர்களை மதிப்பதை காட்டுகிறது. இது அவர்களின் தனித்தன்மை மற்றும் தனித்திறன்களை காட்டுவதாக உள்ளது.
நீ என்னை சிறப்பானவனாக மாற்றிவிட்டாய்
இது ஒவ்வொருவருக்கும் நேர்மறையான எண்ணத்தை கொண்டுசேர்க்கும். வாழ்வில் நீங்கள் எவ்வளவு முக்கியமானவர் என்பதை காட்டுவதாக இருக்கும். அவர்களின் இருப்பால் உங்கள் வாழ்வு எவ்வாறு மாறிவிட்டது என்பதை காட்டுவதாக இது இருப்பதால் இதை கூறுவது இதயத்தை தொடுவதாக அமையும்.
நீ எனது பாதுகாப்பான சொர்க்கம்
நீங்கள் யாரையாவது சொர்க்கம் அல்லது சரணாலயம் என்றெல்லாம் கூறினீர்கள் என்றால் அது அவர்களுக்கு மிகவம் மகிழ்ச்சியைத்தரும். அவர்களுக்கு எவ்வளவு சௌகர்யத்தை கொடுத்துள்ளீர்கள் அல்லது பாதுகாப்பை கொடுத்துள்ளீர்கள் என்பதை காட்டும். வாழ்க்கையின் சவாலான காலங்களில் நீங்கள் அவர்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும்போது அவர்கள் அதிகப்படியான மகிழ்ச்சியில் திளைக்கிறார்கள்.
அந்த நிலவை சூரியன் காதலித்ததைவிட அதிகளவு நான் உன்னை காதலிக்கிறேன்
இது ஒரு அதிகப்படியான காதலை அன்பை வெளிக்காட்டுவதாக இருக்கும். நீங்கள் உங்கள் காதலர் மீது வைத்திருக்கும் எல்லையற்ற அன்பை வெளிப்படுத்துவதாக இருக்கும். இது உங்கள் அன்பின் ஆழத்தை காட்டுவதாக உள்ளது. இதனால் உங்களுக்கு பிரபஞ்சத்தின் சக்தி கிடைத்ததை போன்ற உணர்வு ஏற்படும்.
நான் உன்னை முழுவதும் நம்புகிறேன்
நீங்கள் உங்கள் காதலரிடம் இப்படி கூறும்போது, அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி உண்டாகிறது. காதலுக்கு அடிப்படையானது நம்பிக்கை, அது ஆழமான அன்பின் வெளிப்பாடாக அமைகிறது. இது நிரந்தர மற்றும் சிறந்த அன்பை வெளிக்காட்டுவதாக உள்ளது. உறவின் அடிப்படையாக நம்பிக்கை உள்ளது.
நீதான் எனது இல்லம்
இது முற்றிலும் அவர்களை சார்ந்திருப்பதையும், உணர்வு ரீதியான முழுமையையும் காட்டுவதாக உள்ளது. அவர்களின் அன்பு, பாசம் மற்றும் புரிதல் நிறைந்ததாக உங்கள் உறவை சித்தரிக்கிறது.
உன் பாதங்களை நீ என் பாதங்களில் வைக்கலாம்
நீங்கள் இவ்வாறு கூறுவது நேர்மையான மற்றும் விளையாட்டுத்தனம் நிறைந்து கூறுவதாக உள்ளது. நீங்கள் எத்தனை காலம் ஒன்றாக இருக்க எண்ணுகிறீர்கள் என்பதை இது சுடிக்காட்டுவதாக உள்ளது. இது கொஞ்சம் குறும்புத்தனம் நிறைந்த வாசகமாகவும் இருக்கிறது. உங்களின் உண்மை அன்பின் வெளிப்பாடாகவும் உள்ளது.