Ethanol Procurement Price Hike: எத்தனாலுக்கான கொள்முதல் விலை அதிகரிப்பு…. விவசாயிகள் லாபம் அடைய வாய்ப்பு…
இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பெட்ரோலில் எத்தனால் கலக்கப்படுகிறது. அதாவது இந்தியாவில் பயன்படுத்தப்படும் பெட்ரோல், டீசல் தயாரிப்புக்கு தேவையான கச்சா எண்ணெய்யில் 85 சதவிகிதம் சர்வதேச சந்தையிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இதனால் மத்திய அரசுக்கு அதிக செலவு ஏற்படுவதால், பெட்ரோலுடன் எத்தனால் கலந்து விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டது. தற்போது இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பெட்ரோலில் 10 சதவிகித எத்தனால் கலந்து விற்பனை செய்யப்படுகிறது.
எத்தனால் தயாரிப்பு முக்கிய தேவையான மொலாசஸ் இருந்து எத்தனால் எடுக்கப்படுகிறது. கரும்பிலிருந்து சர்க்கரை எடுப்பதற்கு பயன்படுத்தப்பட்ட பிறகு, அதிலிருந்து வெளியேறும் கழிவில் இருந்து எத்தானல் எடுக்கப்படுகிறது. இந்தியாவின் மாநில எரிபொருள் சில்லறை விற்பனையாளர்கள் சி-ஹெவி மொலாசஸ் மூலம் தயாரிக்கப்படும் எத்தனாலின் கொள்முதல் விலையை லிட்டருக்கு 6.87 ரூபாய் உயர்த்தி லிட்டருக்கு 56.28 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தொழில்துறை தெரிவித்துள்ளது.
பெட்ரோலுடன் கலப்பதற்குப் பயன்படுத்தப்படும் எத்தனால் உற்பத்தியை அதிகரிக்கவே இந்த விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் விற்கப்படும் ஒரு லிட்டர் பெட்ரோலில் 10% க்கும் அதிகமாக பெட்ரோல் கலக்கப்படுகிறது. வரும் 2025 க்குள் பெட்ரோலுடன் எத்தனால் கலப்பதை 20 சதவிகிதமாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், எத்தனால் உற்பத்தியைக் குறைப்பதன் மூலம் சர்க்கரை விநியோகத்தை அதிகரிக்க அரசு முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. அதாவது கரும்புச் சாறு அல்லது சிரப்பைப் பயன்படுத்த வேண்டாம் என்று அரசாங்கம் சர்க்கரை ஆலைகளுக்கு உத்தரவிட்டது.
சி-ஹெவி வெல்லப்பாகுகளிலிருந்து மட்டுமே எத்தனாலை உற்பத்தி செய்ய வேண்டுமென மத்திய அரசு கரும்பு ஆலைகளுக்கு தெரிவித்துள்ளது.