Crude Oil Purchase in Rupee Payment: ரூபாய் மதிப்பில் கச்சா எண்ணெய் வாங்கிய மத்திய அரசு…. பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என நம்பிக்கை…
உலகின் மூன்றாவது பெரிய எரிபொருள் நுகர்வு நாடான இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து வாங்கும் கச்சா எண்ணெய்க்கான பேமெண்டை ரூபாயின் மதிப்பில் வழங்கியுள்ளது. யுஏஇயிலிருந்து வாங்கப்படும் கச்சா எண்ணெய்க்கு ரூபாயின் மதிப்பில் பணம் செலுத்துவது இதுவே முதல்முறையாகும்
இந்த மூலமாக சர்வதேச சந்தையில் ரூபாயின் மதிப்பை உயர்த்துவதற்கு ஏதுவாக அமையும். இதன் மூலமாக இந்தியாவின் அன்னிய செலவாணி வெகுவாக குறையும் என கூறப்படுகிறது. மேலும் பரிவர்த்தனை செலவுகளைக் குறைத்தல் மற்றும் இந்திய ரூபாயை சர்வதேச வர்த்தகத்துக்கு பயன்படுத்துவதற்கான முயற்சியாக இது அமையும். இதன் ஒரு பகுதியாக 2022ம் ஆண்டு ஜூலை முதல் இந்திய ரிசர்வ் வங்கி தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதாவது இறக்குமதியாளர்கள் ரூபாயில் செலுத்தவும், ஏற்றுமதியாளர்கள் உள்ளூர் நாணயத்தில் பணம் செலுத்தவும் அனுமதிக்கிறது.
ஜூலை மாதம், ஐக்கிய அரபு எமிரேட்ஸுடன் ரூபாய் செட்டில்மெண்ட்டுக்கான ஒப்பந்தத்தை இந்தியா முறைப்படுத்தியது. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி) அபுதாபி நேஷனல் ஆயில் நிறுவனத்திடமிருந்து (அட்னாக்) இந்திய ரூபாயில் ஒரு மில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெயை வாங்குவதற்கு பணம் செலுத்த வழிவகுத்தது. கூடுதலாக, சில ரஷ்ய எண்ணெய் நிறுவனங்களும் ரூபாயின் மதிப்பில் பணத்தை பெற்று கொள்ள ஒப்புதல் தெரிவித்தனர்.
இந்தியாவில் தேவைப்படும் எரிபொருளுக்கான கச்சா எண்ணெய்யில் 85 சதவீதத்துக்கும் அதிகமான இறக்குமதியையே ஆகும். இதனால் கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு இந்திய அரசு அதிக அளவிலான பணத்தை செலவு செய்ய வேண்டியுள்ளது. அதாவது கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு டாலரின் மதிப்பில்தான் பேமெண்ட் வழங்கப்படுகிறது. அதேபோல டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. இதனால் பெரும் பொருளாதார சிக்கல்களை சந்திக்க வேண்டியுள்ளது. இந்த நிலையில் ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு ரூபாயில் செட்டில் செய்யப்பட்டன.