அரிசி விலை உடனடியாக குறைக்க வேண்டுமென மத்திய அரசு உத்தரவு….மக்கள் அதிக பயனடையும் வகையில் நடவடிக்கை…
இந்தியாவில் சில்லறை வர்த்தகத்தில் விற்பனை செய்யப்படும் அர்சியின் விலையை உடனடியாக குறைக்க வேண்டுமென மத்திய அரிசி தொழிலில் ஈடுபடும் சங்கங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
அதாவது அரிசியின் எம் ஆர் பி விலைக்கு, கடைகளில் விற்பனை செய்யப்படும் அரிசியின் விலைக்கும் அதிக வித்தியாசம் இருப்பதாகவும், நுகர்வோரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. சில்லறை வர்த்தகத்தில் விற்பனை செய்யப்படும் அரிசியின் விலை உண்மையானதாக இருக்க வேண்டுமென, அரிசி விற்பனை செய்யும் கடை உரிமையாளர்கள் சங்கங்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. மொத்த விற்பனையாளர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்களிக்கு இடையே அதிக விலை வித்தியாசம் இருப்பதாகவும், எனவே உடனடியாக அரிசியின் விலையை குறைக்க வேண்டுமென மத்திய அரசு தெரிவித்துள்ளது.
எம் ஆர் பி விலைக்கு, கடைகளில் விற்பனை செய்யப்படும் அரிசிக்கு அதிக வித்தியாசம் இருப்பதாகவும், நுகர்வோர் அதிக பயன் அடையும் வகையில் செயல்பாடுகள் இருக்க வேண்டுமென்றும் அறிவுறுத்தப்பட்டது.
மேலும் நல்ல தரமான அரிசி போதுமான அளவு இருப்பு உள்ளது என்று இந்திய உணவு கழகம் தெரிவித்துள்ளது. அரிசி பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஒப்பன் மார்க்கெட் விற்பனையின் கீழ் ரூ. 29க்கு ஒரு கிலோ அரிசி விற்பனை செய்யப்படுகிறது