Wholesale price inflation: மொத்த பணவீக்கம் விகிதம் 8 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்வு….
இந்தியாவின் மொத்த பணவீக்கம் கடந்த 8 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. 2023ம் ஆண்டு மார்ச் மாதத்துக்கு பிறகு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஏனெனில் நவம்பர் மாதத்தில் மொத்த பணவீக்க விகித 0.26 சதவீதமாக உயர்ந்துள்ளது என வர்த்தக அமைச்சகம் வெளியிட்டது. மொத்த விற்பனை விலைக் குறியீடு பணவீக்கம் அக்டோபர் மாதத்தில் -0.52 சதவீதமாகவும், நவம்பர் 2022 இல் 6.12 சதவீதமாகவும் இருந்தது.
நவம்பர் மாதத்தில் மொத்தத்தில் பணவீக்கம் விகிதம் 0.26 சதவிகிதமாக உள்ளது. சமீபத்திய மொத்த விலை பணவீக்கம் எட்டு மாதங்களில் இல்லாத அதிகபட்சமாகும்.
மொத்த சில்லறை பணவீக்கம் நவம்பரில் 5.55 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஜூலையில் 15 மாத அதிகபட்சமாக இருந்த 7.44 சதவீதத்திலிருந்து 189 அடிப்படைப் புள்ளிகள் குறைந்துள்ளது என்று புள்ளியியல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நுகர்வோர் விலைக் குறியீட்டைப் போலவே, மொத்த விலை பணவீக்க விகிதம், நவம்பரில் மாதந்தோறும் 0.5 சதவீதம் உயர்ந்தது. உணவுக் குறியீட்டில் 1.9 சதவீதம் உயர்ந்துள்ளது. காய்கறிகளில் இருந்து மிகப்பெரிய உந்துதலாக இருந்துள்ளது. மாதத்திற்கு 16.5 சதவிகிதம் விலைக் குறியீட்டு அதிகரிப்பு, வெங்காயத்தின் குறியீட்டில் 41.3 சதவிகிதம் உயர்ந்துள்ளது. பழங்கள் 1.7 சதவீதம், கோதுமை 1.6 சதவீதம், மற்றும் பருப்பு வகைகள் 1.4 சதவீதம் ஆகியவை விலையில் தொடர்ச்சியாக அதிகரித்துள்ளது. மொத்த உணவுப் பணவீக்கம் அக்டோபரில் 1.07 சதவீதத்தில் இருந்து நவம்பரில் 4.69 சதவீதமாக உயர்ந்துள்ளது.