அதிகாலை காதலியின் வீட்டில் சத்தமிட்டு சிக்கிக்கொண்ட காதலன்; இளம் காதல் ஜோடி கொடூர கொலை.!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பதாவுன் மாவட்டம், பிளசி கிராமத்தை சேர்ந்தவர் மகேஷ். இவருக்கு 20 வயதுடைய நீது என்ற மகள் இருக்கிறார். அதே பகுதியில் வசித்து வரும் இளைஞர் சச்சின் (வயது 20).

சச்சின் – நீது இடையே ஏற்பட்ட பழக்கமானது, பின்னாளில் காதலாக மாறியதாக தெரியவருகிறது. காதல் ஜோடி அவ்வப்போது தனிமையில் சந்தித்து வந்துள்ளது.

இந்நிலையில், நேற்று நள்ளிரவு நேரத்தில் தனது காதலியை சச்சின் திருட்டுத்தனமாக பார்க்க அவரின் வீட்டிற்கு சென்றுள்ளார். வீட்டின் அறையில் காதல் ஜோடி இருந்துள்ளது.

இன்று அதிகாலை 04:30 மணியளவில் வீட்டில் கேட்ட சத்தத்தால் எழுந்த பெற்றோர், மகளின் அறைக்கு சென்றுள்ளனர். அங்கு மகள் இளைஞர் ஒருவருடன் இருப்பதை கண்டுள்ளனர்.

இதனால் உச்சக்கட்ட ஆத்திரத்திற்கு சென்ற மகேஷ், தனது மகள் மற்றும் அவரின் காதலரை மண்வெட்டியால் தாக்கி கொலை செய்தார். பின், காவல் நிலையத்திற்கு சென்று விஷயத்தை கூறி சரணடைந்தார்.

இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், மகேஷின் வாக்குமூலப்படி, அவர் கொலை செய்த சச்சின் மற்றும் நீது ஆகியோரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *