தீப்பிடித்து எரிந்த விமானம்.. உள்ளே 400 பயணிகள்.. பரபர சம்பவம்!
டோக்கியோ (Tokyo-Haneda Airport) விமான நிலைய ஓடுதளத்தில் தரையிறங்கும்போது கடலோர காவல் படை விமானத்துடன் மோதி ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் தீப்பிடித்து எரிந்தது. மீட்டுப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விமானத்தில் இருந்த 279 பயணிகள் பத்திரமாக மீட்கபட்டுள்ளனர்.
இருப்பினும், கடலோர காவல் படை விமானத்தில் இருந்த 6 பேரில் ஒருவரைப் பற்றிய தகவல் தெரியவந்த நிலையில், மீதமுள்ள 5 வீரர்கள் பற்றிய தகவல் இதுவரை தெரியவில்லை. ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானி விபத்தில் இருந்து தப்பித்ததாகவும் கூறப்போடுறது.
Japan Airlines flight JL516, an Airbus A350 has collided with a Coast Guard aircraft on the runway at Tokyo-Haneda Airport. The aircraft is on fire with rescue operations underway. pic.twitter.com/BygfKxZBgh
— Breaking Aviation News & Videos (@aviationbrk) January 2, 2024
முன்னதாக, நேற்று ஜப்பானின் மத்திய மாகாணங்களில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் இது 7.4 ஆக பதிவானதாக அந்நாட்டு புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். 1 லட்சத்திற்கும் குறைவான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றனர்.
Ishikawa, Niigata, Toyama ஆகிய கடலோர பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. Wajima என்ற நகரில் சுமார் ஒரு மீட்டர் உயரத்திற்கு அலைகள் எழுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.