|

புத்தம் புதிய நெக்ஸான் காரை துவம்சம் செய்த சர்வீஸ் சென்டர்! அடுத்து நடந்ததை கேட்டு வாகன உலகமே மிரண்டு நிக்குது

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புகழ்பெற்ற கார் மாடல்களில் ஒன்று நெக்ஸான். இதன் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை சமீபத்திலேயே டாடா விற்பனைக்குக் களமிறக்கியது.

அதீத பாதுகாப்பு திறனுக்கு பெயர்போன கார் மாடலாக இது இருக்கிறது. இத்தகைய ஓர் கார் மாடலையே சர்வீசுக்கு வந்த நிலையில், அதனை சர்வீஸ் மைய ஊழியர் தவறுதலா துவம்சம் செய்திருக்கின்றனர்.

சர்வீஸ் பணிக்காக அந்த காரை அவர் இயக்கி பார்த்தபோது, சுவரில் மோதி விபத்தை ஏற்படுத்தி இருக்கின்றார். இதனால் காரின் முன் பக்கத்தில் பெரிய அளவில் சேதம் ஏற்பட்டு இருக்கின்றது. பொதுவாக இதுமாதிரியான நிகழ்வுகளின்போது ஷோரூம் நிர்வாகம், தங்களின் தவறை மறைத்துவிடும் அல்லது இன்சூரன்ஸை கிளைம் செய்துக் கொள்ளும் வற்புறுத்துவார்கள்.

ஆனால், இந்த சம்பவத்தில் சற்று வித்தியாசமாக ஷோரூம் நிர்வாகம் செயல்பட்டு இருக்கின்றது. அவர்கள், தங்களின் தவறை ஒப்புக் கொண்டு இருக்கின்றனர். மேலும், அவர்களே இந்த தவறை செரி செய்துக் கொடுப்பதாகவும் அவர்கள் வாக்குறுதி அளித்திருக்கின்றனர். அதை அவர்கள் உடனடியாக செய்தும் கொடுத்திருக்கின்றனர்.

இதுகுறித்த தகவலையே நெக்ஸான் காரின் உரிமையாளர், அவரின் எக்ஸ் கணக்கின் பதிவு வாயிலாக தெரிவித்து இருக்கின்றார். முன்னதாக, சர்வீஸ் மைய ஊழியர் மற்றும் காரின் உரிமையாளர் இடையே வாகனத்தின் பாதிப்புகளைப் படம் பிடிப்பதில் மோதல் ஏற்பட்டு இருக்கின்றது. உரிமையாளரை படம் பிடிக்க சர்வீஸ் மைய ஊழியர்கள் தடை செய்திருக்கின்றனர்.

இந்த மாதிரியான சூழலை அடுத்தே காரின் பாதிப்புகள் அனைத்தும் சர்வீஸ் மையத்தால் சரி செய்து கொடுக்கப்பட்டு இருக்கின்றது. மேலும், டெஃப்ளான் பூச்சும் இந்த காருக்கு வழங்கப்பட்டு இருக்கின்றது. இது பெயிண்டை கூடுதலாக பாதுகாக்க உதவியாக இருக்கும். சர்வீஸ் மையத்தின் இந்த உடனடி ரெஸ்பான்ஸுக்கு காரின் உரிமையாளர் பாராட்டுக்குளைத் தெரிவித்து இருக்கின்றார்.

நொய்டாவிலேயே இந்த சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. இந்த சம்பவத்திற்காக நெக்ஸான் உரிமையாளர் மட்டுமல்ல மற்ற கார் காதலர்கள் பலரும் சர்வீஸ் மையத்திற்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர். இதுபோன்ற நிகழ்வுகள் மிகவும் அரிதானவை என்பதாலேயே பலர் இதற்கு பாராட்டுகளைக் குவித்துக் கொண்டிருக்கின்றனர். ஏனெனில், இந்த மாதிரியான பெரும்பாலான நிகழ்வுகளில் சர்வீஸ் மையம் வாடிக்கையாளர்களைக் கைவிடுவதே அரங்கேறும்.

பின்னர், அவர்கள் பலதரப்பட்ட போராட்டத்தை மேற்கொண்டு பின்னர் நீதிமன்றம் அல்லது வேறு வழிகளில் கார் சர்வீஸ் மையத்தை தங்கள் வழிக்குக் கொண்டு வருவர். ஆனால், நொய்டாவில் அரங்கேறிய நிகழ்வில் பெரிய அளவில் எந்தவொரு அலைக்கழிப்பும் இல்லாமல் தீர்வு காணப்பட்டு இருக்கின்றது. ஆகையால், இது அதிசயத்தில் ஒன்றாகவும் பார்க்கப்படுகின்றது.

இந்தியாவின் மிக அதிக பாதுகாப்பு திறன் கொண்ட கார் மாடலே டாடா நெக்ஸான் ஆகும். இந்த எஸ்யூவி ரக கார் இந்தியாவில் ரூ. 8.10 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. மேலம், பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு விதமான எஞ்சின் ஆப்ஷனிலும் இந்த கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது. 1.2லிட்டர் டர்போ சார்ஜட் பெட்ரோல், 1.5லிட்டர் டீசல் ஆகிய மோட்டார் ஆப்ஷன்களே இந்த காரில் வழங்கப்படுகின்றது.

இதில், ஏஎம்டி வசதிக் கொண்ட டீசல் நெக்ஸான் ஒரு லிட்டருக்கு 24.01 கிமீ மைலேஜும், டீசல் மேனுவல் லிட்டருக்கு 23.23 கிமீ மைலேஜையும் வழங்கும். இதே மேனுவல் கியர்பாக்ஸ் வசதி கொண்ட பெட்ரோல் நெக்ஸான் ஒரு லிட்டருக்கு 17.01 கிமீ மைலேஜையும், ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்ட பெட்ரோல் நெக்ஸான் 17.44 கிமீ மைலேஜையும் வழங்கும் என டாடா மோட்டார்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: நொய்டா சம்பவத்தை முன்னுதாரணமாகக் கொண்டு மற்ற ஷோரூம்களும் செயல்பட்டால் கார் உரிமையாளர்கள் அந்த சர்வீஸ் மையத்திற்கு கோவில் கட்டியே கும்பிடுவார்கள். ஆனால், பலர் இதை செய்வதில்லை. இதனால்தான் பல சம்பவங்களில் போர்களத்தைப் போல சூழல் மாறிவிடுகின்றது. அல்லது ஒரு சிலர் நீதிமன்றத்தின் உதவியை நாடிவிடுகின்றனர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *