மணிப்பூர் வன்முறை சம்பவங்கள் : 2 குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்தது சி.பி.ஐ.,
மணிப்பூர் வன்முறை சம்பவங்கள் தொடர்பாக இரு குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ., தாக்கல் செய்தது. மணிப்பூரில் கடந்தாண்டு மே மாதம் பெரும்பான்மையாக வசிக்கும் மெய்டி சமூகத்தினருக்கு, பட்டியலின பழங்குடி அந்தஸ்து அளிப்பதை எதிர்த்து, கூகி உள்ளிட்ட பழங்குடியினர் அமைப்புகள் கடந்த ஆண்டு நடத்திய பேரணியில் வன்முறை வெடித்தது.
இதை தொடர்ந்து பழங்குடியின பெண்கள் நிர்வாணமாக அழைத்துச் செல்லப்பட்ட சம்பவங்கள் ஆகியவற்றால், மணிப்பூர் முழுதும் கலவரம் வெடித்தது. இதில் 180 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அதன் பின் செப். 25-ல் காணாமல் போன இரு பள்ளி மாணவர்கள் கொலை செய்யப்பட்டது.இந்த இரு வன்முறை சம்பவங்கள் தொடர்பாக இரு வேறு வழக்குகளை சி.பி.ஐ., விசாரித்து வந்தது.
இதில் இரு மாணவர்கள் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேரை கைது செய்துள்ளது. இரு வழக்குகளில் தனித்தனியாக இரு குற்றப்பத்திரிக்கைகளை கவுஹாத்தி சி.பி.ஐ, சிறப்பு குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது சி.பி.ஐ.