50 முறை “பில் கிளிண்டன்” பெயர்.. பல சிறுமிகளை கடத்தி வன்கொடுமை! வெளியான சீக்ரெட் நீதிமன்ற ரிப்போர்ட்

அமெரிக்காவில் பெண்கள் மைனர் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்யக் கடத்திய வழக்கு தொடர்பான விசாரணையில், முன்னாள் அமெரிக்க அதிபரான பில் கிளிண்டன் பெயர் இடம்பெற்றுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

அமெரிக்காவைப் பொறுத்தவரை அவ்வப்போது ரகசிய ஆணவங்கள் பொதுவெளியில் வெளியிடப்படும். பல காரணங்களுக்காக அவர்கள் இப்படி செய்வார்கள். அப்படி வெளியான ஒரு ரகசிய நீதிமன்ற ஆவணங்கள் இப்போது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ரகசிய நீதிமன்ற ஆவணம் கடந்த வாரம் தான் பொதுவெளியில் வெளியிடப்பட்டது. இந்த ஆவணம் முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டனை ஜெஃப்ரி எப்ஸ்டீன் வழக்குடன் தொடர்புப்படுத்தும் வகையில் இருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் கூறுகின்றனர்.

அதென்ன ஜெஃப்ரி எப்ஸ்டீன் வழக்கு: அமெரிக்காவைச் சேர்ந்த ஜெஃப்ரி எப்ஸ்டீன் மர்மம் மற்றும் சர்ச்சைகள் நிறைந்த ஒரு நபராகவே இருந்துள்ளார். கடந்த 1953இல் நியூயார்க்கில் பிறந்த இவர் பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது நட்பு வட்டாரமே முன்னணி அரசியல்வாதிகள், நட்சத்திரங்கள் ஆகியோரை உள்ளடக்கியது.

இருப்பினும், இவர் பெண்கள், சிறுமிகளை ஆகியோரை கடத்தி அவர்களுடன் பாலியல் உறவு கொண்டதாகப் புகார்கள் எழுந்தன. 2008ஆம் ஆண்டில், மைனர் சிறுமியுடன் உறவு கொண்டதற்காக அவர் கைது செய்யப்பட்டார். இதனால் அவர் 13 மாதங்கள் காவலில் வைக்கப்பட்டார். இருப்பினும், இந்த காலகட்டத்தில் அவருக்குப் பல சலுகைகள் வழங்கப்பட்டது. இது கடும் விமர்சனங்களை எதிர்கொண்டது.

மர்ம மரணம்: அதன் பிறகும் அவர் பல சர்ச்சைகளில் சிக்கி வந்தார். இதற்கிடையே கடந்த ஜூலை 2019இல், புளோரிடா மற்றும் நியூயார்க்கில் மைனர் சிறுமிகளைக் கடத்தி பாலியல் உறவில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் எப்ஸ்டீன் மீண்டும் கைது செய்யப்பட்டார். இந்த முறை அமெரிக்கா அதிகாரிகள் மிகத் தீவிரமான விசாரணையை ஆரம்பித்தனர். இருப்பினும், அடுத்த மாதமே அதாவது 2019 ஆகஸ்டில் அவர் சிறையில் இறந்து கிடந்தார்.

அவர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்பட்டது. இருப்பினும், எப்ஸ்டீனின் மரணம் பல கேள்விகளுக்கு விடையளிக்கவில்லை. மறுபுறம் ஜெஃப்ரி எப்ஸ்டீன் வழக்கு நீதிமன்றத்தில் நடந்த நிலையில், அதில் பலரது பெயர்கள் மறைக்கப்பட்டு இருந்தது. வழக்குடன் தொடர்புடைய பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட சுமார் 150க்கும் மேற்பட்டோர் பெயர்கள் “ஜேன் டோஸ்” அல்லது “ஜான் டோஸ்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

பில் கிளிண்டன் பெயர்: இதற்கிடையே பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் இப்போது இந்த ரகசிய நீதிமன்ற ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதில் அமெரிக்க முன்னாள் அதிபரான பில் கிளிண்டன் பத்திரிகைகளில் “டோ 36” என்று பெயரிடப்பட்டுள்ளார். அவரது பெயர் மட்டும் இந்த பலாத்காரத்திற்குப் பெண்களைக் கடத்தும் விசாரணையில் சுமார் 50+ முறை இடம்பெற்றுள்ளது.

அமெரிக்க கப்பலை சுற்றி வளைத்த ஹவுதி படகுகள்.. அடுத்து நடந்த பரபர சம்பவம்.. செங்கடலில் பரபரப்பு

அதேநேரம் அவர் தவறான செயல்களில் ஈடுபட்டார் என்பது போன்ற இடங்களில் கிளிண்டன் பெயர் இடம்பெறவில்லை. வேறு காரணங்களுக்காகவே குற்றவாளி எக்ஸ்டீன், முன்னாள் அமெரிக்க அதிபரான கிளிண்டன் பெயரை பயன்படுத்தியதாகத் தெரிகிறது.

இது குறித்து விசாரணை அதிகாரிகள் கூறுகையில், “எப்ஸ்டீன் தனது செல்வத்தையும் அதிகாரத்தையும் பயன்படுத்தி தனது வீடுகளில் பல ஆண்டுகளாகப் பல இளம் பெண்களை பாலியல் ரீதியாகத் துஷ்பிரயோகம் செய்து வந்துள்ளார். ஒவ்வொரு முறையும் அவர்களுக்குப் பணம் கொடுத்து புகார் அளிக்காமல் தடுத்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண்களையே வேறு பெண்களை அழைத்து வரச் சொல்லி, அதற்கும் தனியாகக் காசு கொடுத்துள்ளார்” என்றார்.

அதிர்வலைகள்: இந்தச் சம்பவம் அமெரிக்க அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதில் பல முக்கிய நபர்கள், பிரபலங்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. வரும் நாட்களில் இந்த விவகாரம் அமெரிக்காவில் பூதாகரமாக வெடிக்கக் கூடும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *