”ஆன்மீக ரகசியம்”: சாப்பிடும் போது இந்த தவறுகளை ஒருபோதும் செய்து விடாதீர்கள்!
நொறுங்க தின்றால் நூறு வயது என்பது பழமொழி. அதுபோல் சாப்பிடும் போது உணவை நன்றாக மென்ற பின்பு தான் விழுங்க வேண்டும்.
அவசரமாக உணவை விழுங்கினால் தேவையற்ற உடல் நலக்குறைவு ஏற்படும்.
நாம் சாப்பிடும் போது சில முறைகளை கடைபிடிக்க வேண்டும் என ஆன்மீகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் உணவு என்றால் பிடித்தமான ஒன்று. உணவை பிரதானம் எனவும் சொல்வார்கள்.
சாப்பிடும் போது உணவிற்கு நாம் மரியாதை கொடுக்க வேண்டும். அவ்வாறு கொடுக்கும் மரியாதை தான் நம் ஆரோக்கியமாக மற்றும் எந்த கஷ்டமும் இல்லாமல் வாழ்வதற்கான வழி.
* உணவிற்கு முக்கியத்துவம் வழங்கும் வகையில் சாப்பிடுவதற்கு முன்பு அன்னபூரணி தாயே வணங்கி விட்டு சாப்பிட வேண்டும். சாப்பிடும் போது சில விஷயங்களை செய்யக்கூடாது என்ற சாஸ்திரங்கள் உண்டு.
* குறிப்பாக வீட்டில் ஒருவர் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது பூஜை செய்யக்கூடாது. சாப்பிடும் பொழுது கையை கீழே ஊன்றக்கூடாது. அவ்வாறு சாப்பிட்டால் சாப்பிடும் உணவு உடம்பில் ஒட்டாது என முன்னோர்கள் தெரிவித்து இருப்பார்கள்.
* இன்றைய காலகட்டத்தில் சாப்பிடுவதற்கு டைனிங் டேபிள் வந்துவிட்டது. என்னதான் நாகரீக காலமாக இருந்தாலும் தரையில் சம்மணம் போட்டு அமர்ந்து சாப்பிட வேண்டும். படுக்கையிலோ நாற்காலிகிலோ அமர்ந்து சாப்பிடுவதால் உணவில் இருந்து கிடைக்கும் ஆற்றல் உடல் முழுவதும் வேகமாக பரவுவதில் தடை ஏற்படும்.
* சாப்பிடும் முன், பின் இரண்டு கைகளையும் நன்றாக கழுவ வேண்டும். சாப்பிடும் பொழுது இடது கையை பயன்படுத்தாமல் வலது கையை மட்டும் தான் பயன்படுத்த வேண்டும். தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் ஆரோக்கியம்.
* சாப்பாடு தரையில் கொட்ட கூடாது. கோபமாக சாப்பிடக்கூடாது. இரண்டு கைகளால் உணவை பிசைந்து சாப்பிடக்கூடாது என பல்வேறு வழிமுறைகள் உள்ளன. பெரியவர்கள் மட்டுமல்லாமல் குழந்தைகளும் உணவை தரையில் சிந்தாமல் சாப்பிட பழகிக் கொள்ள வேண்டும்.
* சாப்பிடும் பொழுதும், சமையல் அறையில் உணவு சமைக்கும் பொழுதும் கோபமாக இருக்கக் கூடாது. சாப்பிடும் பொழுது தலையில் எண்ணெய் வைத்திருக்கக் கூடாது. தலையில் எண்ணெய் தேய்த்துக் கொண்டிருக்கும் பொழுது ஒருபோதும் சாப்பாட்டை தொடக்கூடாது. தலையில் எண்ணெய் வைத்துக்கொண்டு ஒருவரை வழி அனுப்புவது கூடாது.
* பூஜை அறையில் விளக்கு எரிந்து கொண்டிருந்தால் சாப்பிட்டு முடித்த பின்னர் தான் அதை குளிர வைக்க வேண்டும். இல்லையென்றால் சாப்பிட அமர்வதற்கு முன்பாகவே விளக்கை குளிர விட வேண்டும்.
இதனை எல்லாம் நம் முன்னோர்கள் கடைபிடித்ததினால் அவர்கள் ஆரோக்கியமாகவும் கஷ்டங்கள் இல்லாமலும் வாழ்ந்தார்கள். எனவே நாம் அனைவரும் அதனை பின்பற்றுவோம்.