முதல் ஆப்பே ஹர்திக்கிற்கு தான்..இனி கேப்டன் கனவே கூடாது.. ரோகித் நகர்த்திய காய்.. டி20யில் ஹிட்மேன்
மும்பை இந்தியன்ஸ் கிரிக்கெட் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டதிலிருந்து ரோகித் சர்மாவுக்கும் அவருக்கும் பனிப்போர் நடந்து வருவதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தாம் வந்தால் கேப்டன் பதவி தமக்கு கொடுக்க வேண்டும் என ஹர்திக் பாண்டியா முறையிட்டதால், அந்த அணி நிர்வாகம் ரோகித் சர்மாவை பதவியில் இருந்து நீக்கியது தான் பிரச்சனைக்கு ஆரம்பப் புள்ளியே.
இந்த நிலையில் ஹர்திக் பாண்டியாவின் கனவான டி20 இந்திய அணியின் கேப்டன் என்ற பொறுப்பு நிறைவேறக்கூடாது என்பதற்காக ரோஹித் சர்மா பலே திட்டம் ஒன்றை தீட்டு இருக்கிறார். இந்திய டி20 அணியில் ரோகித் சர்மா கடந்த 2022 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் ஆட்டத்தில் அடைந்து தோல்வியை ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் டி20 கிரிக்கெட்டில் விளையாடாமல் இருந்தனர்.
இதனால் ஹர்திக் பாண்டியா சூரிய குமார் யாதவ் ஆகியோர் இந்திய டி20 அணியின் கேப்டனாக பல்வேறு தொடர்களில் பங்கேற்றனர். இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் பதவியை ஹர்திக் பாண்டியா பறித்து விட்டதால் தற்போது ரோகித் சர்மா டி20 அணியின் கேப்டனாக திரும்ப முடிவு எடுத்திருக்கிறார். அதன்படி வரும் 2024 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை ஜூன் மாதம் தொடங்க உள்ளது.
அடே நண்பா! உன்னை வெல்வேன்.. வெற்றி நிச்சயம்.. வெறித்தனமாக பயிறசி செய்யும் ஹர்திக்.. ட்ரோலுக்கு பதலடி
அதற்கு முன்பு இந்திய அணி ஆப்கானிஸ்தானுக்கு எதிராக மூன்று டி20 போட்டிகளில் ஜனவரி மாதம் விளையாட உள்ளது. இதனால் இந்த டி20 போட்டிகளில் கேப்டனாக ரோகித் சர்மா திரும்ப உள்ளார். இதன் மூலம் வரும் உலக கோப்பையில் ரோகித் சர்மா தான் கேப்டனாக இருக்கப் போகிறார் என்பது தெளிவாகிவிட்டது. மேலும் விராட் கோலி இந்த டி20 உலக கோப்பையில் களமிறங்க கூடும் என தெரிகிறது.
இதனால் இந்திய அணியின் கேப்டனாக டி20 உலக கோப்பையில் வழி நடத்தலாம் என்று நினைத்த ஹர்திக் பாண்டியாவின் கனவு தற்போது நிறைவேறாமல் போகிவிட்டது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிந்தவுடன் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்படும் என தெரிகிறது. இதில் ரோகித் சர்மா விராட் கோலி ஆகியோர் விளையாட கூடும்.