2வது டெஸ்டில் இந்தியா மீண்டும் வெல்லும்.. எடுத்துக்காட்டுடன் கூறிய முன்னாள் பயிற்சியாளர்

மும்பை : தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவிய நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி வென்று தொடரை சமன் செய்யுமா என்று எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
புத்தாண்டில் வெற்றியுடன் இந்திய அணி டெஸ்ட் தொடரை தொடங்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த நிலையில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவினாலும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக முன்னாள் பயிற்சியாளர் பரத் அருண் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் முதல் டெஸ்டில் நாம் மோசமாக விளையாடினாலும் கே எல் ராகுல் சதம் அடித்து நம்மை ஒரு நல்ல நிலைக்கு கொண்டு வந்தார். அதேசமயம் பவுலர்களுக்கு நிறைய உதவிகள் ஆடுகளத்தில் இருந்து கிடைத்தது. எனினும் எனக்கு முதல் டெஸ்டில் இருந்து சில நல்ல விஷயங்கள் தெரிந்தது. முதல் டெஸ்டில் நாம் நிச்சயம் பதிலடி கொடுத்திருக்கலாம்.
ஆனால் ஒரு டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறுவதோ தோல்வி பெறுவதோ முக்கியம் கிடையாது. ஆனால் எந்த வகையில் நாம் போராடினோம் என்பதுதான் முக்கியம். ஆனால் முதல் டெஸ்டில் நாம் ஆட்டம் இழந்த முறை போராடாமல் சரண்டர் ஆகி விட்டோம். அதுவும் இரண்டாவது இன்னிங்ஸில் ஆடிய விதம் நிச்சயமாக பார்ப்பதற்கு மோசமாகவே இருந்தது. அதேசமயம் இந்திய அணி நல்ல பலமாக தான் இருக்கிறது.
ஒரு தோல்வியில் இருந்து மீண்டு வந்து வெற்றி பெறுவதற்கான அனைத்து தகுதிகளும் திறமையும் நம்மிடம் இருக்கிறது. ஆஸ்திரேலியாலில் 36 ரன்களுக்கு நாம் ஆட்டம் இழந்து அடுத்த மூன்று டெஸ்டுகளிலும் கம்பேக் கொடுத்து நாம் வெற்றி பெற்றோம். அந்தத் தொடரை ஒப்பிட்டுப் பார்த்தால் இது ஒன்றும் அவ்வளவு சவால்கள் நிறைந்த தொடர் கிடையாது