பயிற்சி செய்ய கூட வீரர் இல்ல..கடுப்பான விராட் கோலி.. உள்ளூர் வீரரை அழைத்தும் ஏமாற்றம்..என்ன நடந்தது?
மும்பை : தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது. இதில் ஒரு இன்னிங்ஸ் மட்டும் 32 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோற்றது. இதற்கு காரணம் தென்னாப்பிரிக்க அணி அபாரமாக பந்து வீசி அசத்தியது.
தென்னாப்பிரிக்கா வீரர் ரபாடா முதல் டெஸ்டில் ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதேபோன்று அறிமுக வீரராக களம் இறங்கிய பர்கர் முதல் டெஸ்டில் முதன் இன்னிங்ஸில் மூன்று விக்கெட்டுகளும், இரண்டாவது இன்னிங்ஸில் நான்கு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். பர்கர் இடது கை வேகப்பந்துவீச்சாளராக விளங்குகிறார். இவர் விராட் கோலி உள்ளிட்ட பேட்ஸ்மேன்களுக்கு கடும் நெருக்கடியை கொடுத்தார்.
இதனால் விராட் கோலி எளிதாக விளையாடினார். எனினும் இந்த பயிற்சியில் விராட் கோலிக்கு மனநிறைவு ஏற்படவில்லை. நன்றாக வேகமாக வீசக்கூடிய இடது கை வேகப் பந்துவீச்சாளர்களை கேட்டால் இவர்கள் பந்தை மெதுவாக வீசக்கூடிய ஒரு வீரரை அனுப்பி இருக்கிறார்கள் என்று விராட் கோலி கோபத்தில் இருந்தார். இதேபோன்று ஸ்ரேயாஸ், ஷார்ட் பாலை எதிர்கொள்ளும் போது அடிக்கடி ஆட்டம் இழந்து விடுகிறார். இதன் காரணமாக ஷார்ட் பாலை எதிர்கொள்வதற்கு என பயிற்சியில் ஈடுபட்டார்
அப்போது இலங்கையை சேர்ந்த வீரர் ஒருவர் வீசிய ஷார்ட் பால் ஸ்ரேயாஸ் வயிற்றை தாக்கியது. இதனால் அவர் சிறிது நேரம் பேட்டிங் செய்யவில்லை. அதேபோன்று இரண்டு நாட்களுக்கு முன்பு பயிற்சியில் ஈடுபட்ட போது சர்துல் தாக்கூரின் கையில் அடிபட்டது. எனினும் இன்றைய பயிற்சி முகாமில் அவர் பங்கேற்று பேட்டிங்கில் ஈடுபட்டார். இதன் காரணமாக இந்திய அணியில் பெரிய மாற்றம் எதுவும் பிளேயிங் லெவனில் இருக்காது என கூறப்படுகிறது.
இலங்கையை சேர்ந்த வீரர் ஒருவர் வீசிய ஷார்ட் பால் ஸ்ரேயாஸ் வயிற்றை தாக்கியது. இதனால் அவர் சிறிது நேரம் பேட்டிங் செய்யவில்லை. அதேபோன்று இரண்டு நாட்களுக்கு முன்பு பயிற்சியில் ஈடுபட்ட போது சர்துல் தாக்கூரின் கையில் அடிபட்டது. எனினும் இன்றைய பயிற்சி முகாமில் அவர் பங்கேற்று பேட்டிங்கில் ஈடுபட்டார். இதன் காரணமாக இந்திய அணியில் பெரிய மாற்றம் எதுவும் பிளேயிங் லெவனில் இருக்காது என கூறப்படுகிறது.