புதன் பெயர்ச்சி பலன் 2024: தனுசு ராசியில் உருவாகும் கூட்டணி.. வெற்றியை ருசிக்க போகும் 6 ராசிக்காரர்கள்
சென்னை: செவ்வாயின் வீடான விருச்சிக ராசியில் சுக்கிரன் உடன் கூட்டுக்குடித்தனம் செய்யும் புதன் கிரகம் ஜனவரி 7 ஆம் தேதி முதல் தனுசு ராசிக்கு இடம் பெயர்கிறார். சூரியனும், செவ்வாயும் தனுசு ராசியில் பயணம் செய்யும் இந்த கால கட்டத்தில் புதனும் இணைவதால் குரு பகவானின் வீட்டில் புது கூட்டணி உருவாகிறது. இந்த கூட்டணியால் சில ராசிக்காரர்களுக்கு காரிய வெற்றிகள் உண்டாகும்.
புதன் பெயர்ச்சி: மனிதர்களின் வாழ்க்கையைப் பொறுத்தவரை சர்வம் புதன்மயம் என்று கூறலாம். அந்தளவிற்கு புதன் ஒருவரின் வாழ்க்கையில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. புத்திக்கும், வித்தைக்கும் அதிபதியாக இருக்கும் இவர், அறிவு, ஆற்றல், கல்வி ஆகியவற்றிற்கு காரண கர்த்தாவாக விளங்குவதால்தான் வித்தைக்காரகன் என்றும் அழைக்கப்படுகிறார். புதன் நரம்பின் நாயகன். இவர் பலவீனமாக இருக்கும் பட்சத்தில் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் சில கோளாறுகள் ஏற்படும். இன்னும் 1 மாத காலத்திற்கு புதன் சூரியன் செவ்வாயுடன் இணைந்து தனுசு ராசியில் பயணம் செய்யப்போவதால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.
மேஷம்: புதன் உங்கள் ராசிக்கு 9ஆம் இடத்தில் அமர்வதால் வருமானம் அதிகரிக்கும் எந்த பக்கமாவது இருந்து பணம் வந்து கொண்டேயிருக்கும். சிலருக்கு புரமோசன் கிடைக்கும். கமிஷன், புரோக்கரேஜ் வழியில் பணம் வரும். பூா்வீக சொத்தில் பிரச்னைகள் தலைதூக்கும். அப்பாவின் உடல்நிலையில் கவனம் செலுத்துங்கள். புதிய முயற்சிகளில் விழிப்புணர்வு அவசியம். பிரச்சினைகளை சமாளிக்க புதன்கிழமைகளில் பச்சை நிற ஆடை அணிந்து பெருமாள் கோவிலுக்கு செல்லுங்கள் பாதிப்புகள் குறையும்.