குரு பெயர்ச்சி பலன்.. 2024ல் சொந்த கார் வாங்கும் 6 ராசிக்காரர்கள்.. ராஜ யோகம் தேடி வரும்
சென்னை: குரு பகவான் பார்த்தால் கோடி நன்மைகள் தேடி வரும். குருவின் பார்வை பலருக்கும் அதிர்ஷ்டத்தையும் யோகத்தையும் கொடுக்கும். குரு பகவானின் பயணம், பார்வையால் 2024ஆம் ஆண்டு சொந்த வண்டி வாகனம் வாங்கும் யோகம் யாருக்கு தேடி வரப்போகிறது என்று பார்க்கலாம்.
மேஷம்: குரு பகவான் பயணத்தாலும் பார்வையாலும் பெரிய வெற்றிகளும் சந்தோஷமும் தேடி வரும். குருவின் பார்வை உங்கள் ராசிக்கு சாதகமான இடங்களில் விழுவதால் சொத்து சேரும். சொந்த கார் வாங்க வேண்டும் என்ற எண்ணம் நிறைவேறும். வேலையில் புரமோசன் சம்பள உயர்வு கிடைக்கும். அஷ்டலட்சுமி யோகத்தை தேடி கொடுக்கப்போகிறது. வியாழக்கிழமை அனுமனை வழிபடுவது நல்லது.
மிதுனம்: மே மாதம் முதல் 12ஆம் வீடான விரைய ஸ்தானத்திற்கு வரப்போகிறார் குரு பகவான். பணவருமானம் நன்றாக இருக்கும். சொத்து சேர்க்கை ஏற்படும். விரைய செலவுகளை சுப விரைய செலவுகளாக மாற்றுங்கள். குரு பகவானின் பார்வை சுக ஸ்தானமான 4வது வீட்டின் மீது விழுவதால் வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்கலாம். சொந்த வாகனம் வாங்கும் யோகம் தேடி வருகிறது. திருச்செந்தூர் முருகனை வியாழக்கிழமை சென்று தரிசனம் செய்து வர நன்மைகள் நடைபெறும்.
சிம்மம்: உங்களுடைய ராசிக்கு தொழில் ஸ்தானமான பத்தாம் இடத்தில் அமரப்போகும் குருவினால் நல்ல வேலை கிடைக்கும். புதிய பொறுப்புகள் வரும். தொழில் வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். உங்கள் ராசிக்கு நான்காம் வீடான சுக ஸ்தானத்தின் மீது குருவின் பார்வை விழுவதால் கார் வாங்கும் யோகம் கைகூடி வந்துள்ளது. அமாவாசை நாளில் குல தெய்வ வழிபாடு குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரிக்கும்.
கன்னி: 2024ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பிறகு குருவின் பார்வை உங்க ராசிக்கு கிடைக்கிறது. சகலவிதமான நன்மைகளையும் தரப்போகிறது. பதவியில் அமரப்போகும் ராஜயோகம் வந்து விட்டது. வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்பவர்களுக்கு நல்ல வேலையும் லாபமும் கிடைக்கும். பண வருமானம் வரும் போது அதை சுப செலவாக மாற்றுங்கள். சொந்த வாகனம் வாங்கும் யோகம் வந்துள்ளது. உங்களுக்கு ராசியான நிறமாக பார்த்து வாங்கவும்.
விருச்சிகம்: 2024ஆம் ஆண்டு நிகழப்போகும் குரு பெயர்ச்சி அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தப்போகிறது. உங்கள் ராசிக்கு நேர் எதிராக அமரப்போகும் குரு பகவான் தனது பொன்னான பார்வையால் நேரடியாக உங்கள் ராசியை பார்வையிடுகிறார். குரு பெயர்ச்சியால் நீங்கள் தொட்டது துலங்கும். வெற்றிகள் தேடி வரப்போகிறது. பொன்னான காலத்தில் சொந்த வாகனம் வாங்கும் யோகம் தேடி வரப்போகிறது.
மகரம்: குரு பகவான் ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்து உங்கள் ராசியை பார்வையிடுவதால் கை நிறைய சம்பளத்தில் நல்ல வேலை கிடைக்கும். சிலருக்கு புரமோசனும் சம்பள உயர்வும் தேடி வரும். திடீர் அதிர்ஷ்டமும் யோகமும் வரும். வெற்றிகள் தேடி வரும் காலம் என்பதால் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ளுங்கள். நான்காம் வீட்டில் உள்ள ராகு வாகன யோகத்தை தரப்போகிறார். 2024ஆம் ஆண்டில் கார் வாங்கும் யோகம் கைகூடி வரப்போகிறது.