டாக்ஸியில் ரூ.5 லட்சத்தை விட்டுச் சென்றவரிடம் பணத்தை ஒப்படைத்த இந்தியர்.. இணையத்தில் குவியும் பாராட்டு!

ஆஸ்திரேலியாவில் ரூ. 5 லட்சத்தை டாக்ஸியில் விட்டுச் சென்ற நபரிடம், அந்த பணத்தை இந்தியரான சரண்ஜித் சிங் ஒப்படைத்துள்ளார். இந்த நிகழ்வு ஆஸ்திரேலியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேர்மையாக நடந்து கொண்ட சரண்ஜித் சிங்கிற்கு பாராட்டுகள் குவிந்துள்ளன.

இந்தியாவை சேர்ந்த சரண்ஜித் சிங் என்பவர் மெல்போர்ன் நகரில் டாக்ஸி டிரைவராக பணியாற்றி வருகிறார். சில நாட்களுக்கு முன்னால் ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர்கள் அவரது காரில் பயணம் சென்றுள்ளனர். அப்போது, இந்திய மதிப்பில் ரூ. 5 லட்சம் மதிக்கத்தக்க ஆஸ்திரேலிய பணத்தை அவர்கள் விட்டுச் சென்று விட்டனர்.

இதனை சில மணி நேரத்திற்கு பின்னர் கவனித்த சரண்ஜித் சிங், உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று நடந்த விபரங்களை கூறியுள்ளார். பின்னர், அந்த பணம் உரிய நபர்களிடம் விசாரணைக்கு பின்னர் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் ஆஸ்திரேலிய சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து யார் இந்த சரண்ஜித் சிங் என்று பலரும் தேட ஆரம்பித்து விட்டார்கள்.

இதுபற்றி சரண்ஜித் சிங் கூறுகையில், ‘பயணிகள் விட்டுச் செல்லும் பொருட்களை நான் ஒருபோதும் என் காரில் வைத்திருக்க மாட்டேன். அவர்கள் தரும் வெகுமதியும் எனக்கு தேவையில்லை’ என்று தெரிவித்தார்.

சரண்ஜித் சிங்கை பாராட்டியுள்ள நெட்டிசன்கள், சிங் இஸ் கிங் என்றும், தன்னுடைய நேர்மையான செயலால் அதை விட 10 மடங்கு நல்ல விஷயங்கள் அவருக்கு நடக்கும் என்றும் கூறியுள்ளனர். இன்னும் சிலர் சீக்கியர்களின் நல்ல செயல்கள், சமூக சேவைகள், உணவைப் பகிர்வது போன்றவற்றைப் பற்றி நான் கேட்கும் போது, ​​அது அப்படியே தொடர வேண்டும் என்று விரும்புகிறேன். என்று கூறியுள்ளார்.

முன்னதாகஇந்த ஆண்டின் தொடக்கத்தின்போது பிரிஸ்பேன் நகரில் இந்திய சுமை தூக்கும் பணியாளர் ஒருவர் ஆஸ்திரேலிய பயணி தவறவிட்ட போன், பணம், ஹேண்ட்பேக் உள்ளிட்டவற்றை பத்திரமாக திருப்பி கொடுத்தார். இதற்காக அவருக்கு ரொக்கப் பணம் பரிசாக வழங்கப்பட்டபோது, நான் என் கடமையை செய்தேன். இதற்காக எந்த வெகுமதியும் பெற முடியாது என்று கூறியிருந்தார். இந்த சம்பவமும் அதிகம் பேசப்பட்டது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *