டாக்ஸியில் ரூ.5 லட்சத்தை விட்டுச் சென்றவரிடம் பணத்தை ஒப்படைத்த இந்தியர்.. இணையத்தில் குவியும் பாராட்டு!
ஆஸ்திரேலியாவில் ரூ. 5 லட்சத்தை டாக்ஸியில் விட்டுச் சென்ற நபரிடம், அந்த பணத்தை இந்தியரான சரண்ஜித் சிங் ஒப்படைத்துள்ளார். இந்த நிகழ்வு ஆஸ்திரேலியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேர்மையாக நடந்து கொண்ட சரண்ஜித் சிங்கிற்கு
இந்தியாவை சேர்ந்த சரண்ஜித் சிங் என்பவர் மெல்போர்ன் நகரில் டாக்ஸி டிரைவராக பணியாற்றி வருகிறார். சில நாட்களுக்கு முன்னால் ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர்கள் அவரது காரில் பயணம் சென்றுள்ளனர். அப்போது, இந்திய மதிப்பில் ரூ. 5 லட்சம் மதிக்கத்தக்க ஆஸ்திரேலிய பணத்தை அவர்கள் விட்டுச் சென்று விட்டனர்.
இதனை சில மணி நேரத்திற்கு பின்னர் கவனித்த சரண்ஜித் சிங், உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று நடந்த விபரங்களை கூறியுள்ளார். பின்னர், அந்த பணம் உரிய நபர்களிடம் விசாரணைக்கு பின்னர் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் ஆஸ்திரேலிய சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து யார் இந்த சரண்ஜித் சிங் என்று பலரும் தேட ஆரம்பித்து விட்டார்கள்.
இதுபற்றி சரண்ஜித் சிங் கூறுகையில், ‘பயணிகள் விட்டுச் செல்லும் பொருட்களை நான் ஒருபோதும் என் காரில் வைத்திருக்க மாட்டேன். அவர்கள் தரும் வெகுமதியும் எனக்கு தேவையில்லை’ என்று தெரிவித்தார்.