இந்தியாவில் பட்ஜெட் விலையில் கிடைக்கும் ஆட்டோமேட்டிக் கார் மாடல்களின் பட்டியல் இதோ
கோவிட்-19 பெருந்தொற்றால் பெரும் சரிவில் இருந்த இந்திய ஆட்டோ மொபைல் துறை, தொற்று கணிசமாக குறைந்ததில் இருந்து தற்போது வரை சிறப்பான விற்பனை வளர்ச்சியை தொடர்ந்து பதிவு செய்து வருகிறது. கார்களின் விற்பனை அதிகரித்துள்ள நிலையில், நாட்டில் மேனுவல் மாடல்களுக்கு பதில் ஆட்டோமேட்டிக் மாடல் கார்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது.
போக்குவரத்து நெரிசல் நிறைந்த இந்திய சாலைகளில் அடிக்கடி கியர்களை மாற்ற வேண்டி இருப்பதன் சிரமத்தை குறைக்க உதவுவதால் ஆட்டோமேட்டிக் கார்கள் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கிறது. அதிக போக்குவரத்து நெரிசல்மிக்க சாலைகளில் பயன்படுத்த எளிதாகவும் இருக்கிறது. நீங்கள் புதிதாக ஆட்டோமேட்டிக் கார்களை வாங்க திட்டமிட்டிருந்தால், உங்கள் பட்ஜெட் ரூ.6 லட்சம் முதல் ரூ.8.5 லட்சம் என்றால் உங்களுக்கான ஆட்டோமேட்டிக் கார்களின் பட்டியல் கீழே…
மாருதி சுசூகி வேகன்ஆர் ஏஎம்டி (Maruti Suzuki WagonR AMT):
இந்த பட்டியலில் மாருதி சுசுகி நிறுவனத்தின் வேகன்ஆர் ஏஎம்டி (ஆட்டோமேட்டட் மேனுவல் டிரான்ஸ்மிஷன்) முதல் இடத்தில் உள்ளது. இதன் பேஸ் மாடலின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.6.54 லட்சமாக உள்ள நிலையில், இதன் டாப் வேரியன்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.7.42 லட்சமாக உள்ளது. இந்த ஹேட்ச்பேக் 1.2-லிட்டர்
4-சிலிண்டர் பெட்ரோல் எஞ்சினை கொண்டுள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 88bhp பவரையும், 113Nm பீக் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. இந்த ஹேட்ச்பேக் லிட்டருக்கு அதிகபட்சம் 25 கிமீ வரை மைலேஜை வழங்கும் என்று நிறுவனம் கூறுகிறது.
மாருதி சுசுகி ஸ்விஃப்ட் ஏஎம்டி (Maruti Suzuki Swift AMT):
சந்தேகத்திற்கிடமின்றி குறைந்த பட்ஜெட்டில் ஒரு ஆட்டோமேட்டிக் காரை வாங்க விரும்புபவர்களுக்கு மாருதி சுசுகி நிறுவனத்தின் Swift AMT சிறந்த ஆப்ஷனாக இருக்கும். ஸ்விஃப்ட்டின் AMT டிரான்ஸ்மிஷன் VXI மாடலை ரூ.7.5 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என்ற ஆரம்ப விலையில் வாங்கலாம். பவர்டிரெய்ன் என்று பார்த்தால் இந்த கார் Wagon R காரில் இருக்கும் அதே அம்சங்கள் மற்றும் எஞ்சின் ஸ்பெஃசிபிகேஷன்களை கொண்டுள்ளது. மேலும் இந்த கார் சில லேட்டஸ்ட் டிரெண்டிங் அம்சங்களை கொண்டு சிறந்த டிரைவ் எக்ஸ்பீரியன்ஸை வழங்குகிறது. இதன் எரிபொருள் செயல்திறனைப் பொறுத்த வரையில் லிட்டருக்கு சுமார் 22.56 கிமீ மைலேஜை வழங்குகிறது.
டாடா பஞ்ச் ஏஎம்டி (Tata Punch AMT):
இதன் பாக்ஸி டிசைன் மற்றும் குவாலிட்டி பில்ட் காரணமாக அறிமுகமானத்திலிருந்து இந்திய வாடிக்கையாளர்களிடமிருந்து டாடா பஞ்ச் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இந்த மைக்ரோ-எஸ்யூவியின் AMT மாடல் ரூ.6 லட்சம் முதல் – ரூ.8 லட்சத்திற்கு இடையிலான விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் இதன் சிறந்த மாடலான அட்வென்ச்சர் ஏஎம்டி-யின் விலை ரூ.7.5 லட்சம் வரை செல்கிறது. Camo அட்வென்ச்சர் ஏஎம்டி-யின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ. 7.6 லட்சம் மற்றும் ஏஎம்டி ரிதம் வேரியன்ட்டின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.7.95 லட்சமாக உள்ளது. மேற்கண்ட மாடல்களை தவிர வாடிக்கையாளர்கள் பலேனோ மற்றும் டிசையர் AMT மாடல்களையும் கருத்தில் கொள்ளலாம்.