அசைக்க முடியாத கோட்டையை கட்டிய ஓலா! 2023ல மொத்தம் எத்தனை வண்டி சேல்ஸ் ஆகியிருக்கு தெரியுமா?
ஓலா நிறுவனம் ஒரே ஆண்டில் 2.65 லட்சம் எலெக்ட்ரிக் டூவீலர்களை விற்பனை செய்து மிகப் பெரிய சாதனையை படித்துள்ளது. இந்தியாவில் இந்த சாதனையைப் படைத்த முதல் எலெக்ட்ரிக் டூவீலர் நிறுவனமாக ஓலா நிறுவனம் தான் இருக்கிறது. இந்தியாவில் பெருகிவரும் எலெக்ட்ரிக் வாகன மோகத்தால் இந்த மிகப்பெரிய சாதனையை அந்நிறுவனம் படைத்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
2024 ஆம் புத்தாண்டு பிறந்த ஜனவரி மாதம் துவங்கியுள்ள நிலையில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் கடந்த டிசம்பர் மாதம் மற்றும் கடந்த 2023-ம் ஆண்டு ஒட்டுமொத்த விற்பனையை அறிக்கையாக நமக்கு தெரிவித்து வருகின்றனர். அதன்படி ஓலா நிறுவனமும் தற்போது அதன் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையின்படி கடந்த டிசம்பர் மாதம் ஓலா நிறுவனம் மொத்தம் 30,219 வாகனங்களை விற்பனை செய்துள்ளது இந்நிறுவனம் எலெக்ட்ரிக் டூவீலர் செக்மென்ட்டில் 40% பங்கு வகிக்கும் வகையில் அதிக எண்ணிக்கையிலான வாகனங்களை விற்பனை செய்துள்ளது இந்த தரவுகள் வாகன தளத்திலிருந்து எடுக்கப்பட்ட தரவுகளில் இருந்து நமக்கு கிடைத்துள்ளது.
இதுவரை ஓலா நிறுவனம் விற்பனை செய்த அளவுகளில் கடந்த டிசம்பர் மாதம் தான் அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன இதுவே கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் விற்பனையுடன் ஒப்பிடும்போது 74 சதவீதம் ஓலா நிறுவனம் அதிக எண்ணிக்கையிலான வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதுவே காலாண்டு படி கணக்கிட்டாலும் ஓலா நிறுவனம் சிறப்பான விற்பனை தான் செய்துள்ளது.
இந்த நிதியாண்டின் மூன்றாவது காலாண்டு நிறைவடைந்த நிலையில் இந்த காலாண்டில் 83,963 வாகனங்களை நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இது கடந்த ஆண்டுக்கான மூன்றாம் காலாண்டு விற்பனை விபரத்தை ஒப்பிடும்போது 68 சதவீதம் அதிகமாகும். அதே நேரம் கடந்த இரண்டாவது காலாண்டில் விற்பனையுடன் ஒப்பிடும்போது 48 சதவீதம் அதிகமான அளவில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
ஓலா நிறுவனம் இந்த டிசம்பர் மாதம் ஒரு முக்கியமான மைல் கல்லை எட்டி உள்ளது. இந்நிறுவனம் மொத்தம் 4 லட்சம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரித்து மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது. வெறும் 24 மாதங்களில் இந்நிறுவனம் இந்த சாதனையை படைத்துள்ளது. இது மட்டுமல்ல இந்நிறுவனம் கடந்த 2023 காலண்டர் ஆண்டில் மொத்தம் 2.65 லட்சம் வாகனங்களை விற்பனை செய்துள்ளது.
இவ்வளவு அதிகமான வாகனங்களை விற்பனை செய்த முதல் எலக்ட்ரிக் டூவீலர் நிறுவனமாக இந்நிறுவனம் தான் இருக்கிறது. ஓலா நிறுவனம் தனது ஸ்கூட்டரை வெளியிடப் போவதாக அறிவித்தது முதலே மக்கள் மத்தியில் டூவீலர்களுக்கு நல்ல மவுசு ஏற்பட்டுவிட்டது. இந்த டூவீலர் அறிமுகமாகும் போதே ஏகப்பட்ட மக்கள் இந்த டூவீலரை வாங்க விரும்பினார்கள். இன்று இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் தனது ஷோரூம்களை துவங்கி ஓலா நிறுவனம் விற்பனையை தீவிரபடுத்தி உள்ளது.
ஓலா நிறுவனம் சிறப்பான விற்பனையை பெற தொடர்ந்து பல்வேறு ஆஃபர்களை அறிவித்து வருகின்றன. மேலும் தனது தயாரிப்புகளை எண்ணிக்கையையும் கூட்டி வருகிறது ஓலா எஸ்ஒன் ப்ரோ தான் நிறுவனத்தின் பிளக்க்ஷிப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக உள்ளது. இந்து ஸ்கூட்டர் தற்போது 1.47 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. ஓலா எஸ்1 ஏர் என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரூ 1.19 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.
அடுத்ததாக ஓலா எஸ்ஒன் எக்ஸ் என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இருக்கிறது. இது மொத்தம் மூன்று வேரியன்ட்களில் விற்பனையாகி வருகிறது. எஸ்1 எக்ஸ் பிளஸ், எஸ்1 எக்ஸ் 3 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் எஸ்1 எக்ஸ்2 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் என விற்பனை ஆகி வருகிறது. இதில் இந்த ஸ்கூட்டர்கள் ரூபாய் 89 ஆயிரம் முதல் ரூபாய் 1.09 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.