heart Problems in Winter : குளிர் காலத்தில் அதிகம் ஏற்படும் இதய பாதிப்புகள்! தப்பிப்பது எப்படி?
குளிர் காலத்தில் உங்கள் இதயத்தை பாதுகாத்துக்கொள்ளுங்கள்
இந்த குளிர் காலம் வானிலையில் மட்டும் மாற்றத்தை கொண்டுவருவதில்லை. இதய ஆரோக்கியத்திலும் குறிப்பிட்ட மாற்றங்களை கொண்டு வருகிறது. குளிர்காலம் வந்தாலே அது இதயத்தில் பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்துகிறது.
குளிர் காற்று, மூச்சுக்கோளாறுகள் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் குளிர் காலத்துடன் தொடர்புடைய பிரச்னைகள் இதய ஆரோக்கியத்தை பாதிக்கலாம். குளிர்காலத்தில் உங்கள் இதய ஆரோக்கியத்தை பாதுகாப்பது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.
குளிர் இதய ஆரோக்கியத்தை பாதிக்கிறது
குளிர் காற்று ரத்த நாளங்களை பாதித்து, ரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது. இதயத்திற்கு கூடுதல் அழுத்தத்தை கொடுக்கிறது. ஏற்கனவே இதய நோய் பாதித்தவர்களுக்கு இந்த நிலை வரக்கூடாது. எனவே அதிக குளிரில் உடலுக்கு சூட்டை தரும் உடைகளை அணிவது அவசியம். அதிகப்படியான குளிரில் வெப்பநிலை தொடர்பாக இதய பாதிப்பை ஏற்படுத்தும்.
குளிர் மாதங்களில் மாரடைப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்
குளிர் மாதங்களில் மாரடைப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். குளிர் காற்று, ரத்த நாளங்களில் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் ரத்த ஓட்டம் செல்வது கடினமாகிறது. ரத்தம் உறைதலையும் அதிகரிக்கிறது. கூடுதலாக வேலைகள் செய்யும்போது, அது மாரடைப்பை ஏற்படுத்துகிறது. குறிப்பாக ஏற்கனவே இதய கோளாறுகள் உள்ளவர்களுக்கு ஆபத்து அதிகமாகிறது.
குளிர் சுவாச மண்டலத்தையும் இதய ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது
குளிர் காற்று காற்றுப்பாதைகளில் எரிச்சலை ஏற்படுத்தலாம். இதய கோளாறுகள் உள்ளவர்களுக்கு சுவாச கோளாறுகள் ஏற்படும். அது ஏற்கனவே உள் இதய பிரச்னைகளை பூதாகரமாக்கும். குளிர் காலத்தில் சுவாச தொற்றுகள், சளித்தொல்லை மற்றும் காய்ச்சல் ஆகிய அனைத்தும் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
இந்த பிரச்னைகள், கூடுதல் ஆபத்துக்களை இதய பாதிப்பு உள்ளவர்களுக்கு ஏற்படுத்தும் வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே நல்ல சுகாதாரத்தை பேணுவது நல்லது. அடிக்கடி கைகளை கழுவுவது, காய்ச்சலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு எடுத்துக்கொள்வது, சுவாச தொற்றுகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துக்கொள்வது, இதய ஆரோக்கியத்தை மறைமுகமாக பாதுகாக்கிறது.
உடற்பயிற்சி முக்கியம்
குளிர்காற்றால் வெளியே நாம் அதிகம் செல்ல முடியாது, எனினும், உடற் பயிற்சிகள் இதய ஆரோக்கியத்துக்கு மிகவும் முக்கியம். எனவே ஜிம் உள்ளிட்ட உள்அறை பயிற்சிகளை மேற்கொள்வது நல்லது. நடை, நீச்சல் போன்றவற்றையும் செய்து இதய ஆரோக்கியத்தை பேணவேண்டியது அவசியம்.
வெளியே சென்றால் குளிரில் இருந்து பாதுகாக்கும் உடைகளை அணிவது அவசியம். ஐஸ் பாதைகளில் நடக்க நேர்ந்தால் பாதுகாப்புடன் செல்ல வேண்டும். இதய நோய் உள்ளவர்களுக்கு விழுந்தால் அதிக பின்விளைவுகள் ஏற்படும்.
உணவு மற்றும் ஊட்டச்சத்துகளில் சமரசம் செய்துகொள்ளாதீர்கள்
இதய நலனுக்கு ஆரோக்கியமான உணவை ஆண்டு முழுவதும் எடுத்துக்கொள்ள வேண்டும். அந்தந்த பருவத்தில் கிடைக்கும் பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடவேண்டும். உடலில் போதிய நீர்ச்சத்தை பராமரிக்க வேண்டும். அதிக கலோரிகள் கொண்ட உணவை எடுத்துக்கொள்ளக்கூடாது.
அதிக சோடியம் நிறைந்த உணவுகள் ரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பு அளவை பராமரிக்க உதவுகிறது. சரிவிகித உணவு குளிர் காலத்துக்கும் மிகவும் நல்லது. சூடான பானங்களை அருந்த வேண்டும். அது உங்கள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.
குளிர் உங்கள் மன ஆரோக்கியத்தையும் பாதிக்கலாம்
குளிர் உங்களின் மன ஆரோக்கியத்துக்கு மிகவும் தீங்கு விளைவிக்கிறது. பகலில் வெளிச்சம் குறைவாக உள்ளது மற்றும் குளிர் வெப்பநிலை உங்களுக்கு சோர்வான உணர்வை தரும். பருவநிலை கோளாறுகளையும் உங்களுக்கு ஏற்படுத்தலாம். இது மனஅழுத்த மேலாண்மை இதய ஆரோக்கியத்துக்கு மிகவும் முக்கியமானது.
நீண்ட நாள் மனஅழுத்தம் இதய ஆரோக்கியத்தை எதிர்மறையாக பாதிக்கிறது. மனஅமைதியை அதிகரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுங்கள். தியானம், யோகா, உங்கள் மனதுக்கு பிடித்தவர்களுடன் நேரம் செலவிடுவது ஆகியவை உங்கள் மனஆரோக்கியத்துக்கு நல்லது.