Tuberculosis in India : இந்தியாவும், காசநோய் ஒழிப்பும் – ஓர் அலசல்!

ஓராண்டு கழித்து 2 சதவீத டிபி நோயாளிகள் மட்டுமே தனியார் துறை மூலம் அரசுக்கு தெரிவிக்கப்பட்டனர்.

தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் வாயிலாக தனியார் மருத்துவமனைகள் மூலம் 2017 – 21 சதவீதம், 2018 – 25 சதவீதம், 2019 – 28 சதவீதம், 2020 – 31 சதவீதம், 2021 – 32 சதவீதம், 2022 – 30 சதவீதம் நோயாளிகள் அரசுக்கு தெரிவிக்கப்பட்டனர்.

தேசிய செயல்திட்டத்தின் படி தனியார்துறை மூலம் 2020 – 35 சதவீதம், 2021 – 45 சதவீதம், 2022 – 56 சதவீதம் டிபி நோயாளிகள் அரசிற்கு தெரியப்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

2020ல் நிர்ணயிக்கப்பட்ட இலக்கிற்கும்,உண்மை பதிவிற்கும் இடையே உள்ள இடைவெளி குறைவாக இருந்தாலும் 2021ல் 13 சதவீதம் என அதிகரித்திருப்பது மிகவும் கவலைகுரிய ஒன்று.

தேசிய திட்டப்படி (2020-25)படி, 2022ல் 1.93 மில்லியன் TB நபர்கள் தனியார் துறை மூலம் அரசிற்கு தெரியப்படுத்தப்பட வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டாலும், 0.73 மில்லியன் TB நபர்கள் மட்டுமே அரசிற்கு தெரியப்படுத்தப்பட்டனர்.

2022ல் 1.2 மில்லியன் TB நோயாளிகள் தெரியப்படுத்துவது நடக்காமல் அவர்களை கண்டறிவது கைநழுவிப்போயுள்ளது.

தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் இலக்குப்படி குறைந்தது 0.95 மில்லியன் TB நோயாளிகள் கண்டறியப்பட்டு அரசிற்கு தெரியப்படுத்தப்பட வேண்டும். ஆனால் 77% (0.73 மில்லியன் TB நபர்கள்) மட்டுமே கண்டறியப்பட்டு தெரியப்படுத்தப்பட்டுள்ளனர். (அரசுத்துறை மூலம் நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் 92.4% (1.68 மில்லியன் TB நபர்கள்) கண்டறியப்பட்டுள்ளது சாதனையே)

உலக சுகாதார நிறுவனம் 2016ல் TB நோயால் இந்தியாவில் பாதிக்கப்பட்ட 2.8 மில்லியன் பேர்களில், தனியார் துறை-0.3 மில்லியன் TB நபர்கள், அரசுத்துறையிலிருந்து 1.6 மில்லியன் TB நபர்கள் கண்டறியப்பட்டு தெரியப்படுத்துப்படுவதிலிருந்து விடுபட்டுள்ளனர் என்றும், ஏறக்குறைய 1 மில்லியன் விடுபட்ட TB நோயாளிகள் தனியார்துறை மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றிருக்கக்கூடும் என கணித்துள்ளது. அதனால் அரசு காசநோயை ஒழிக்க தனியார் துறையுடன் இணைந்து கூடுதல் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என WHO வலியுறுத்தியுள்ளது.

NSP திட்டத்திலும் 2020-21 இடைப்பட்ட காலத்தில் விடுபட்ட (கொரோனா பாதிப்பு காரணமாக TB திட்டம் சரியாக செயல்படவில்லையா?) 2 மில்லியன் TB நோயாளிகளை தனியார் துறை கண்டறிந்து உரிய சிகிச்சை அளிக்க அரசு உதவிட வேண்டும் எனத் தெரிவித்தும் அது முறையாக நடக்கவில்லை. (ஒரு வேளை தனியார்துறையில் சிகிச்சை பெற்றால் தனக்கு TB நோய் இருப்பது பிறருக்கு தெரியாமல் இருக்கும் என்பது காரணமா?TB நோயாளிகள் சமூகத்தில் மதிக்கப்படுவதில்லை-“Stigmatized”)

தேசிய காசநோய் ஆய்வுத் திட்டத்தில் (National TB Prevalence Survey India-2021-22),

50 சதவீத TB நோயளிகள் தனியாரிடம் சிகிச்சை பெறுவதாகவும்,

NSP திட்டத்தின்படி 70 சதவீத TB நோயாளிகள் தனியாரிடம் சிகிச்சை பெற்றதாகவும், 63.6 சதவீத TB நோயாளிகள் TB அறிகுறிகள் இருந்தும், அரசிடம் சிகிச்சை பெறாமலும் (ஒரு வேளை தனியாரிடம் சிகிச்சை பெற்றிருக்கலாம்) இருந்ததிலிருந்து காசநோய் ஒழிப்பு திட்டத்தில் தனியாரின் பங்கு முக்கியம் என்பதை எளிதாக புரிந்து கொள்ளமுடியும்.

NSP திட்டத்தில் குறைந்தது 0.54 மில்லியன் TB நோயாளிகள் அரசின் கண்காணிப்பு வலைக்குள் வரவில்லை என்றும், தனியாரிடம் அவர்கள் சிகிச்சை பெற்றிருக்கக்கூடும் என்ற தகவல் உள்ளது.

2014ல் காசநோய் மருந்துகள் விற்பனையான தகவலில் இருந்து எடுக்கப்பட்ட புள்ளிவிவரங்கள் மூலம் 2.2 மில்லியன் பேர் TB நோய்க்கு சிகிச்சை பெற்றுள்ளனர் என்பது தெரியவந்துள்ள நிலையில், அந்த ஆண்டு தனியார்துறை மூலம் வெறும் 0.1 மில்லியன் TB நோயாளிகள் மட்டுமே அரசிடம் தெரியப்படுத்தப்பட்டுள்ளனர்.

அரசின் TB பாதிப்பு புள்ளிவபரப்படி (TB Prevalence Survey)2021ல், 312/1 லட்சம் பேர் கண்டறியப்பட்டுள்ள நிலையில், அந்த ஆண்டில் அரசு/தனியார்துறை மூலம் அரசிற்கு தெரியப்படுத்தப்பட்ட TB நபர்கள்-153/1 லட்சம் பேர் மட்டுமே. 2022ல் அது 172.1/1 லட்சம் பேர் என சற்று உயர்ந்திருந்தாலும், விடுபட்ட TB நோயாளிகள் அதிகம் இருக்கையில், 2025க்குள் காசநோய் ஒழிப்பு என்பது தனியார் மற்றும் அரசுத்துறையின் தீவிர பங்களிப்பின்றி சாத்தியமில்லை.

அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு குறைப்பாடுகளை களைய முன்வர வேண்டும்.

IISc பெங்களூருவில், TB கிருமி செயலற்ற தன்மையில் (Dormant) இருப்பதற்கான காரணங்களை (IscS மூலக்கூறு+இரும்புச்சத்து-கந்தகம் குழு உற்பத்திக்கு காரணமான ISUF-Iron-sulphur cluster production system) கண்டறிந்து, காசநோய் சிகிச்சையில் கிருமிக்கொல்லி மருந்துகளோடு, IscS மூலக்கூறு மற்றும் ISUFஐ தடுக்கும் மருந்துகளும் இணைக்கப்பட்டால் நல்ல பலன் கிட்டும் என்பதை IISc நிபுணர்கள் கண்டறிந்து அந்த செய்தி Science Advances எனும் பத்திரிக்கையில் வெளியாகியுள்ளது.

சுருக்கமாக, காசநோயை ஒழிக்க அக்கறையும்,தொழில்நுட்பமும் தேவை என இருந்தும், உரிய அக்கறையே மிக முக்கியமானது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *