Today Rasipalan (03.01.2024): ‘நிதானம் தேவை’..12 ராசிகளுக்கும் உாிய பலன்கள்!
மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கு உண்டான இன்றைய பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.
மேஷம்
மேஷ ராசியினருக்கு இன்று வெளிவட்டாரங்களில் மதிப்பு உயரும். உடனிருப்பவர்களின் ஆதரவால் சில காரியங்கள் நடைபெறும். வியாபாரம் தொடா்பாக சில வியூகங்களை அமைப்பீர்கள். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். உறவினர்களின் வழியில் அனுகூலம் ஏற்படும்.
ரிஷபம்
உறவுகளால் ஏற்பட்ட நெருக்கடிகள் குறையும். ஆடம்பரமான செலவுகளை குறைத்து சேமிப்பை பெருக்குவீர்கள். ஆன்மிகப் பணிகளில் ஆர்வம் மேம்படும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் ஏற்படும். பொழுதுபோக்கு விஷயங்களில் ஈடுபாடு உண்டாகும். உத்தியோகத்தில் விவேகத்துடன் செயல்படவும்.
மிதுனம்
தெரியாத நபா்களிடம் கவனமாக இருக்கவும். புதிய வேலை சார்ந்த எண்ணம் கைகூடும். மாற்றமான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். வாகன விரயம் ஏற்பட்டு நீங்கும். உறவினர்களால் மனவருத்தம் தோன்றி மறையும். வியாபாரத்தில் திடீர் திருப்பம் உண்டாகும்.
கடகம்
கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். புதிய முயற்சிகள் சாதகமாக அமையும். பிடிவாத போக்கினை குறைத்துக் கொள்ளவும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். மறைமுகமான எதிர்ப்புகள் விலகும். நண்பர்களின் வழியில் ஆதரவு கிடைக்கும்.
சிம்மம்
வேலையில் மந்தமான நிலை காணப்படும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் ஏற்படும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். திட்டமிட்டு செயல்படுதால் முன்னேற்றம் உண்டாகும். மனைவியுடன் அனுசரித்துச் செல்லவும். பேச்சுக்களில் நிதானம் வேண்டும்.
கன்னி
உறவினர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். ஆடம்பரமான பொருட்களின் மீது ஆசை அதிகரிக்கும். நண்பர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருக்கவும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். பூர்வீக சொத்துகளில் இருந்துவந்த பிரச்னைகள் குறையும்.