அடிக்கடி விக்கல் வருதா? அப்ப உயிருக்கே உலை வைக்கும் கொடிய பிரச்சனை இருக்குன்னு அர்த்தம்… உஷார்…

விக்கல் என்பது அனைவருக்கும் ஏற்படக்கூடிய ஒரு அனிச்சை செயலாகும். இது ஒருவருக்கு எப்போது வேண்டுமானாலும் வரலாம். பொதுவாக விக்கலானது உதரவிதானத்தின் திடீர் சுருக்கம் மார்பு மற்றும் வயிற்றின் தசைகளை அசைக்க செய்யும் போது ஏற்படும் ஒரு அனிச்சை செயலாகும்.
சிலருக்கு விக்கல் சிறிது நேரம் மட்டுமே நீடித்திருக்கும். இன்னும் சிலருக்கு தொடர்ச்சியாக நீண்ட நேரம் இருப்பதோடு, அடிக்கடி வரக்கூடும். இப்படியான விக்கல்கள் நாள்பட்ட விக்கல்கள் என்று அழைக்கப்படுதோடு, இது ஒரு மோசமான அறிகுறியாகவும் கூறப்படுகிறது.
ஏனெனில் இப்படி தொடர்ச்சியாக வரும் விக்கல்கள் பக்கவாதத்தின் அறிகுறியாகவும் இருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அத்துடன் முகம் வாடி தொங்கியிருந்தாலோ, ஒரு கை மட்டும் பலவீனமாக இருந்தாலோ, மந்தமான பேச்சாக இருந்தாலோ உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
ஆய்வுகளின் படி, பெண்களுக்கு பக்கவாதம் ஏற்படும் போது விக்கல் வரக்கூடும். ஏனெனில் இது சுவாசத்தைக் கட்டுப்படுத்தும் மூளையில் ஏற்பட்டுள்ள பாதிப்பின் அறிகுறியாகும். அதற்காக விக்கல் வந்தாலே பக்கவாதம் வரும் என்றில்லை. எப்போது வழக்கத்திற்கு மாறாக அடிக்கடி விக்கல் ஏற்பட்டு, மேலே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகளை அதிகம் சந்திக்கிறோமோ, அப்போது சற்றும் தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும்.

ஆண் மற்றும் பெண்களுக்கான பக்கவாதத்தின் அறிகுறிகள் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு வெளிப்படும் பக்கவாதத்தின் அறிகுறிகள் ஏன் வேறுபடுகின்றன என்பதற்கு பல கோட்பாடுகள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அதில் ஒன்று, ஹார்மோன்கள் தான் முக்கிய காரணம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதுவும் பெண்களின் உடலில் உள்ள ஈஸ்ட்ரோஜென் அழற்சி எதிர்ப்பு விளைவுகளைக் கொண்டுள்ளதால், அது மூளையில் காயம் ஏதும் விரைவில் ஏற்படாதவாறு பாதுகாக்கும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *