நியூ இயர் பார்ட்டியால ஹெங்கோவரா இருக்கா? அப்ப வீட்டில் தயாரிக்கும் ‘இந்த’ பானங்கள குடிங்க…உடனே சரியாகிடும்!
2024 புத்தாண்டு பிறந்து விட்டது. புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது, பலர் பார்ட்டிகளை திட்டுமிட்டு இருக்கலாம். இன்னும் சில நாட்களுக்கு உங்கள் பார்ட்டி மனநிலை இருக்கலாம். எவ்வளவு மகிழ்ச்சியாக பார்ட்டி கொண்டாடினாலும், அடுத்த நாள் காலையில் உங்களை கடுமையாக தாக்கும் ஹேங்கோவர் குறித்து நீங்கள் அச்சத்தில் இருக்கலாம்.
ஹேங்கோவரை சமாளிப்பது என்பது சவாலானதாக இருக்கலாம். ஆனால் நீரேற்றமாக இருப்பது மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை நிரப்புவது மோசமான ஹேங்கோவரை சரிசெய்ய உதவும். எனவே, ஹேங்கோவரை சரிசெய்ய உதவும் ஐந்து எளிய வீட்டில் தயாரிக்கப்பட்ட பானங்கள் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்வோம்.
மஞ்சள் கலந்த நீர்
மஞ்சள் கலந்த நீர், மஞ்சளின் அழற்சி எதிர்ப்பு பண்புகள் காரணமாக ஹேங்கோவர் அறிகுறிகளைப் போக்க உதவும். வெதுவெதுப்பான நீரில் 1-2 டீஸ்பூன் புதிய துருவிய மஞ்சளை எலுமிச்சை துண்டுகளுடன் சேர்த்து ஒன்றாக கலக்கவும். இனிப்புக்கு தேன் மற்றும் குர்குமின் உறிஞ்சுதலை அதிகரிக்க கருப்புமிளகு சேர்க்கவும்.
புதினா தேநீர்
அதன் இனிமையான பண்புகளுடன் ஹேங்கோவர் அறிகுறிகளுக்கு நிவாரணம் அளிக்கும். புதிய புதினா இலைகளை சூடான நீரில் ஊறவைத்து, பின்னர் வடிகட்டி அருந்துங்கள். தேநீர் குமட்டலை எளிதாக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும் உதவும்.
கிரீன் டீ கிரீன் டீ ஆக்ஸிஜனேற்றத்தின் வளமான மூலமாகும் மற்றும் மிதமான அளவு காஃபினைக் கொண்டுள்ளது, இது நீரிழப்பு மோசமடையாமல் ஒருமென்மையான ஆற்றல் ஊக்கத்தை அளிக்கும். நீங்கள் கிரீன் டீயை சூடாகவோ அல்லது குளிராகவோ அனுபவிக்கலாம். மேலும் சிறிது தேன் அல்லது எலுமிச்சை சேர்த்து அதன் சுவையை அதிகரிக்கலாம்.
காய்கறி அல்லது கோழி சூப்
சூப் ஜீரணிக்க எளிதானது மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்க முடியும். காய்கறி அல்லது சிக்கன் குழம்பு தாதுக்கள் நிறைந்துள்ளது மற்றும் உங்கள் உடல் இழந்த உப்பை மாற்ற உதவும். வெதுவெதுப்பான குழம்பும் இனிமையானதாகவும் ஆறுதலாகவும் இருக்கும்.