Guru 2024: குரு பகவானின் பண யோகம் தொடங்கியாச்சு.. 2024ல் ராஜ வாழ்க்கை பெறும் ராசிகள்
நவகிரகங்களில் மங்கள கிரகமாக விளங்கி வருகிறார் குருபகவான் இவர் ஒரு ராசியில் சஞ்சாரம் செய்ய ஒரு ஆண்டு எடுத்துக் கொள்கிறார். கடந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி அன்று வக்ர நிவர்த்தி அடைந்தார். தற்போது நேரான பயணத்தில் இருந்து வருகிறார் குரு பகவான்.
குரு பகவான் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகிறார். புதிய ஆண்டான 2024 இன் தொடக்கத்திலிருந்து நேரான பயணத்தில் இருந்து வருகிறார் குரு பகவான். இவர் வரும் மே மாதம் மூன்றாம் தேதி அன்று மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு செல்கிறார்.
குரு பகவானின் இந்த இடமாற்றம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக மாறப் போகின்றது. இதனால் இந்த ஆண்டு 12 ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். இருப்பினும் சில ராசிகள் நல்ல பலன்களை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
மிதுன ராசி
குரு பகவான் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றார். ஆன்மீகத்தில் உங்களுடைய ஈடுபாடு அதிகரிக்கும். வாழ்க்கை துணையோடு மகிழ்ச்சி அதிகரிக்கும். அனைத்தும் சிறப்பாக அமைய வாய்ப்பு உள்ளது. அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக அமையும். முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
சிம்ம ராசி
குரு பகவான் உங்களுக்கு வாய்ப்புகளை அள்ளிக் கொடுக்கப் போகின்றார். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். வியாபாரத்தில் நல்ல நேரம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். வியாபாரம் மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய வேலை வாய்ப்புகள் உங்களை தேடி வரும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். பண வரவு எந்த குறையும் இல்லாமல் இருக்கும்.
கன்னி ராசி
குரு பகவான் உங்கள் ராசியில் ஆறாம் வீட்டில் சஞ்சாரம் செய்யப் போகின்றார். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்காத வாய்ப்பு உள்ளது. மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.