“விஜய்யின் லியோ பிடிக்கவில்லை” கீர்த்தி சுரேஷ் தந்தையின் கருத்தால் கொந்தளித்த விஜய் ரசிகர்கள்!

சினிமா உலகில் எக்கச்சக்கமான ரசிகர்களை கொண்டு, முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய். இவருக்கு உலகளவில் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். சினிமா பிரபலங்கள் உட்பட பலரும் இவருக்கு ரசிகர்கள். பெரும்பாலும் அனைவருமே நடிகர் விஜயின் படம் மற்றும் நடிப்பை மெச்சி தான் உள்ளனர். ஆனால் இதற்கு மலையாள திரை பிரபலங்கள் நேர்மறை என்றே கூறலாம்.

பைரவா படத்தில் விஜய்யுடன் நடித்த மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ நடிகர் விஜய் குறித்து நேர்மறையாக பேசி வந்தது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. இதற்கு என்ன காரணம் என்று பார்த்தால், மலையாள ரசிகர்கள் மத்தியில் மம்மூட்டி, மோகன்லாலை விட விஜய்க்கு தான் அதிகளவிலான ரசிகர்கள் உள்ளனர். தமிழகத்தை தொடர்ந்து விஜய்க்கு அதிகமான ரசிகர்கள் இருக்கும் இடம் என்றால் அது கேரளாதான். இது கேரளா பிரபலங்கள் மத்தியில் கடும் எரிச்சலை ஏற்படுத்தியது என்றே கூறலாம்.

விஜய்யின் பைரவா மற்றும் சர்கார் போன்ற படங்களில் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ். கீர்த்தி சுரேஷின் தாய் மேனகா சுரேஷ் ரஜினிக்கு ஜோடியாக நடித்தவர், மேலும் கீர்த்தி சுரேஷின் தந்தை கேரளா திரை உலகின் மிக பிரபலமான தயாரிப்பளார் ஆவார். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர், லியோ படம் குறித்து விமர்சித்துள்ள சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.  அதில், லியோ திரைப்படம் தனக்கு பிடிக்கவில்லை என்றும் எப்படி ஒரே ஆள் 200 பேரை கிளைமாக்ஸில் அடிக்கிறாரோ தெரியவில்லை. இதெல்லாம் சூப்பர் ஹீரோ படங்கள் போலத்தான் உள்ளன. சாமானிய மக்கள் இந்த படங்களுடன் கனெக்ட் செய்ய முடியவில்லை என விமர்சித்துள்ளார்.

நடிகர் விஜய்யின் லியோ படத்தை நடிகை கீர்த்தி சுரேஷின் தந்தை இவ்வாறு விமர்சித்தது விஜய் ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. உங்க பொண்ணு சாணிக்காகிதம் படத்தில் செய்த பையிட் சீனை பார்க்கலையா நீங்க என்றும், மலையாள சினிமாவில் படங்கள் பெரிய அளவில் வசூலை ஈட்டவில்லை என்கிற வயிற்றெரிச்சலில் தான்  இப்படி பேசுகிறார் என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர். பைரவா படம் வரும் போதெல்லாம் எதுவுமே சொல்லலையே ஏன் சார் என்றும் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *